பாலியல் சீண்டல் வழக்கு

Added : நவ 19, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் சிக்கிய சினிமா டைரக்டர் ஷங்கரின் சம்பந்தி மற்றும் மருமகன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். துத்திப்பட்டு கிரிக்கெட் சங்க பயிற்சியாளர் தாமரைக்கண்ணன், 28. கிரிக்கெட் பயிற்சியின்போது, பிளஸ் 2 பயிலும் 16 வயது மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

புதுச்சேரி-பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் சிக்கிய சினிமா டைரக்டர் ஷங்கரின் சம்பந்தி மற்றும் மருமகன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். துத்திப்பட்டு கிரிக்கெட் சங்க பயிற்சியாளர் தாமரைக்கண்ணன், 28. கிரிக்கெட் பயிற்சியின்போது, பிளஸ் 2 பயிலும் 16 வயது மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மாணவி புகார் தெரிவித்தும் கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த அக்., 19ம் தேதி அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீது பாலியல் சீண்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத கிரிக்கெட் சங்க நிர்வாகிகளான தாமோதரன்,58, அணி கேப்டன் ரோகித்,28, பயிற்சியாளர் ஜெயக்குமார்,30, செயலாளர் வெங்கட்,41, உள்ளிட்டோர் மீதும் 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இதில் தாமோதரன், சினிமா இயக்குனர் ஷங்கரின் சம்பந்தி ஆவார். ரோகித், ஷங்கரின் மருமகன் ஆவார். பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மட்டும் கைது செய்யப்பட்டார். பயிற்சியாளர் ஜெயக்குமாருக்கு, கடந்த 12ம் தேதி புதுச்சேரி கோர்ட் ஜாமின் வழங்கியது. இவ்வழக்கில் தாமோதரன், ரோகித், வெங்கட் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நேரடி ஆதாரங்களை திரட்டும் பணியில் மேட்டுப்பாளையம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X