பொது செய்தி

தமிழ்நாடு

100 படுக்கை வசதியுடன் புதிய கட்டடம்; அமைச்சரிடம் மருத்துவர்கள் கோரிக்கை

Added : நவ 19, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதியுடன் கூடிய புதிய கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கணேசனிடம் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர்.பெண்ணாடம் அடுத்த தீவளூர் கமலக்கண்ணன் மகன் ஆனந்தநாராயணன், 15. பத்தாம் வகுப்பு மாணவர். அங்குள்ள பழவாறு ஓடையில் குளத்தில் குளித்தபோது, சேற்றில் சிக்கி இறந்தார். மாணவரின் சடலம், விருத்தாசலம் அரசு

விருத்தாசலம்-விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதியுடன் கூடிய புதிய கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கணேசனிடம் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர்.பெண்ணாடம் அடுத்த தீவளூர் கமலக்கண்ணன் மகன் ஆனந்தநாராயணன், 15. பத்தாம் வகுப்பு மாணவர். அங்குள்ள பழவாறு ஓடையில் குளத்தில் குளித்தபோது, சேற்றில் சிக்கி இறந்தார். மாணவரின் சடலம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அமைச்சர் கணேசன் அஞ்சலி செலுத்தினார்.பின், மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். அவரிடம், 24 மணி நேர அவசர சிகிச்சை மற்றும் இருதய சிகிச்சை பிரிவு கட்டடத்தின் மேல் பகுதியில் 100 படுக்கை வசதியுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட வேண்டும். வலதுபுறம் உள்ள நகராட்சி இடத்தை வாகன நிறுத்தமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுத்தனர். முதல்வரிடம் தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.தலைமை மருத்துவர் எழில், தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, இளைஞரணி கணேஷ், மாணவரணி துணை அமைப்பாளர் அருள்குமார், வழக்கறிஞரணி ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X