பொது செய்தி

தமிழ்நாடு

மழை பாதிப்புக்கு நிவாரணம் பா.ம.க., கூட்டத்தில் தீர்மானம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பா.ம.க., கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.விருத்தாசலத்தில், மேற்கு மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வன்னியர் சங்கத் தலைவர் சிங்காரவேல், துணை செயலாளர்கள் செந்தில்ராஜா, குணசேகரன், மாநில இளைஞரணி மோகன்

விருத்தாசலம்-விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பா.ம.க., கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.விருத்தாசலத்தில், மேற்கு மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வன்னியர் சங்கத் தலைவர் சிங்காரவேல், துணை செயலாளர்கள் செந்தில்ராஜா, குணசேகரன், மாநில இளைஞரணி மோகன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் விஜயகுமார் வரவேற்றார்.ஒன்றிய சேர்மன் செல்வி ஆடியபாதம், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் செல்வராசு, தனபால், மகளிரணி நிர்வாகிகள் சிலம்புச்செல்வி, சத்யாபானு, ஒன்றிய செயலாளர்கள் ஆசாவெங்கடேசன், கோபி, சேட்டு, பாக்யராஜ், அங்கமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் சரவணன், செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.மழையால் பாதித்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுமீட் பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். நகரில் வாகன நெரிசலை தவிர்க்க புறநகர் பஸ் நிலையம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X