தமிழ்நாடு

வெள்ளக்காடானது இடைவிடாத கன மழையால் கடலூர் மாவட்டம்...சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தது

Added : நவ 19, 2021
Share
Advertisement
கடலுார்-வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக, கனமழை கொட்டி தீர்த்ததால், மாவட்டம் வெள்ளக்காடானது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த ஆண்டுகளை விட பருவ மழை, சில நாட்களிலேயே கூடுதலாக பெய்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்கள் வெள்ளக்காடாக மாறி,
 வெள்ளக்காடானது இடைவிடாத கன மழையால் கடலூர் மாவட்டம்...சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தது

கடலுார்-வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக, கனமழை கொட்டி தீர்த்ததால், மாவட்டம் வெள்ளக்காடானது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த ஆண்டுகளை விட பருவ மழை, சில நாட்களிலேயே கூடுதலாக பெய்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்கள் வெள்ளக்காடாக மாறி, மக்கள் பாதிக்கப்பட்டனர்.நீர் நிலைகளில் மூழ்கி 15க்கும்மேற்பட்டோர் பலியாகினர்.

வீடு இடிந்து 5 பேர் இறந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகின. தற்போது மழை குறைந்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் அரசியல் கட்சியினர் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கினர். அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், தற்போது வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக நேற்று முன் தினம் இரவு பெய்ய துவங்கிய மழை நேற்று வரையில் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8:30 வரையில் ஒரு நாள் இரவில் தொழுதுாரில் 6.7 செ.மீட்டரும், மே மாத்துாரில் 6 செ.மீட்டரும் அதிகபட்சமாக மழை பதிவானது. அடுத்து, குப்பநத்தத்தில் 4.9, கடலுார், கீழ்செருவாயில் 48, வேப்பூரில் 4.5 செ.மீட்டர் மழை பதிவாகியது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் மாவட்டத்தில் தண்ணீர் வடிந்த விவசாய வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி, வெள்ளக்காடானது.மாவட்டத்தில் விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் உட்பட பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. கடலுார் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை, கடலுார் முதுநகர் சிதம்பரம் சாலை, கடலுார் திருப்பாதிரிலியூர் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.

கடலுாரில் மஞ்சக்குப்பம் வண்ணான்குட்டை, சாவடி செல்வகணபதி நகர், பாதிரிக்குப்பம் ஓம்சக்தி நகர், செம்மண்டலம், புதுப்பாளையம், வண்டிப்பாளையம், திருப்பாதிரிபுலியூர் உட்பட பல குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் குளமாக தேங்கியது. அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதால் அமைச்சர் கணேசன் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ., அய்யப்பன் ஆகியோர் பார்வையிட்டு தண்ணீர் வடிய நடவடிக்கை எடுத்தனர்.

உள்ளாட்சித்துறை சார்பில் மோட்டார் பம்பு செட் மூலம் இரவு பகலாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அந்த பகுதிகளில் நேற்று பெய்த மழையால் மீண்டும் குளமாக மாறியுள்ளது. கடலுாரில் மிக கனமழை பெய்யும் என, ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து, மக்களை மிரட்டலுக்கு ஆளாக்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X