போதை டிரைவரால் விபத்து; 5 பேர் பரிதாப பலி: இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : நவ 20, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்:திருமண ஊர்வலத்தில் கொலைலக்னோ: உத்தர பிரதேசத்தின் எடாவா மாவட்டத்தில் சதீஷ் என்பவருக்கு, நேற்று முன்தினம் இரவு திருமணம் நடந்தது. அப்போது, ஆட்டம் - பாட்டம் என, திருமண ஊர்வலம் விமரிசையாக நடந்தது. அப்போது பிரிஜேஷ் குமார் என்பவர், தன்னிடம் இருந்த கைத் துப்பாக்கியால் சுட்டார். இதில், கமலேஷ் என்பவர் நெஞ்சில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
crime, murder, arrest, accident


இந்திய நிகழ்வுகள்:திருமண ஊர்வலத்தில் கொலை


லக்னோ: உத்தர பிரதேசத்தின் எடாவா மாவட்டத்தில் சதீஷ் என்பவருக்கு, நேற்று முன்தினம் இரவு திருமணம் நடந்தது. அப்போது, ஆட்டம் - பாட்டம் என, திருமண ஊர்வலம் விமரிசையாக நடந்தது. அப்போது பிரிஜேஷ் குமார் என்பவர், தன்னிடம் இருந்த கைத் துப்பாக்கியால் சுட்டார். இதில், கமலேஷ் என்பவர் நெஞ்சில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். பிரிஜேஷ் அங்கிருந்து தப்பித்தார். அவரை தேடும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


லஞ்சம் பெற்ற வழக்கறிஞர் கைது


வல்சத்: குஜராத்தின் வல்சத் மாவட்டத்தில், மதுபான கடை உரிமையாளரிடம் லஞ்சமாக 1.5 லட்சம் ரூபாய் கேட்டு யேஷா படேல் என்ற பெண் போலீஸ் எஸ்.ஐ., மிரட்டி உள்ளார். பின், யேஷா படேல் சார்பில், வழக்கறிஞர் பாரத் யாதவ், கடை உரிமையாளரிடம் இருந்து அந்த லஞ்சத்தை பெற்றுள்ளார். சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை, ஊழல் தடுப்பு பிரிவினர் நேற்று கைது செய்தனர். இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.


எம்.எல்.ஏ., மீது பாலியல் புகார்


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் கோகுண்டா சட்டசபை தொகுதியை சேர்ந்த பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரதாப் பீல் மீது, 10 மாதங்களுக்கு முன் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அவர் மீது மற்றொரு பெண் நேற்று பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதைஅடுத்து போலீசார் விசாரணையை துவக்கிஉள்ளனர்.


தமிழக நிகழ்வுகள்:கொட்டும் மழையில் தீப்பிடித்த லாரி


கோவை: கேரள மாநிலம், கொச்சியில் இருந்து, மத்திய பிரதேச மாநிலம், இந்துாருக்கு, டயர் லோடு ஏற்றிய, லாரி சென்று கொண்டிருந்தது. சூலுார் எல் அண்ட் டி பை பாஸ் ரோட்டில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு லாரி வந்து கொண்டிருந்தது. டிரைவர் சாம்நாத் ஓட்டி வந்தார். சிந்தாமணிப்புதூர் டோல்கேட் அருகே வந்தபோது, வாரி கேபினில் திடீரென தீப்பிடித்தது. டிரைவர் மற்றும் அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். அப்போது மழையும் பலமாக பெய்து கொண்டிருந்தது.சூலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் மற்றும் வீரர்கள், சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர்.


latest tamil newsபோலீசில் நடிகை சினேகா புகார்


சென்னை: தனியார் சிமென்ட் நிறுவனம், 26 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, நடிகை சினேகா அளித்த புகார் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில், நடிகை சினேகா குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், கேரளாவில் உள்ள எம்.எஸ்., கவுரி சிமென்ட் அண்டு மினரல் என்ற நிறுவனத்தில், மே மாதம், 26 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.இதற்காக மாதம் 1.80 லட்சம் ரூபாய் லாபம் தருவதாக, சிமென்ட் நிறுவனம் கூறி உள்ளது.

பல மாதங்கள் ஆகியும், லாப பணம் தராததால், முதலீடு பணத்தை திருப்பி கேட்டுள்ளார். சிமென்ட் நிறுவன நிர்வாகிகளான சிவராஜ்கவுரி, சந்தியா ஆகியோர் பணத்தை திருப்பி தராமல் மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து, சினேகா, கணவர் பிரசன்னாவுடன் சென்று, கடந்த மாதம் நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் எதிர் தரப்பிடம் ரகசிய விசாரணை நடத்தி உள்ளனர். இதில், பணத்தை திருப்பி தருவதாக, சிமென்ட் நிறுவனம் கூறி உள்ளது. ஒரு மாதமாகியும் பணத்தை திருப்பி செலுத்த வில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் நடிகை சினேகா வசிப்பது, கானத்துார் காவல் நிலைய எல்லை என்று, நீலாங்கரை போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.இதையடுத்து, புகார் கானத்துார் போலீசாருக்கு மாற்றப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


ரூ.8 கோடி வரி ஏய்ப்பு: ஒருவர் கைது


மதுரை: மதுரை மத்திய ஜி.எஸ்.டி., ஆணையரக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சிவகாசியை மையமாக கொண்ட டைல்ஸ், பேப்பர் மற்றும் ரசாயனங்கள் விற்பனை செய்யும் இரண்டு நிறுவனங்கள் ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரிந்தது. இதனால், அரசுக்கு, 8.10 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் 5 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதால், இரு நிறுவனங்களுக்கும் பொறுப்பாளரான 33 வயது நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.


ஆம்னி மீது லாரி மோதி ஐந்து பேர் பரிதாப பலி


ஈரோடு: 'மாருதி ஆம்னி' மீது 'டாரஸ்' லாரி மோதியதில், டிரைவர் உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகினர். லாரி டிரைவர் மது போதையில் இருந்ததால், விபத்து நடந்தது தெரிந்தது.

ஈரோடு கூட்ஸ்ஷெட்டில் இருந்து சிமென்ட் மூட்டைகள் ஏற்றிய டாரஸ் லாரி, சிவகிரி புறப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், பழநி கோவிலில் தரிசனம் செய்து, ஈரோடு மாவட்டம், முத்து கவுண்டன்பாளையத்தை சேர்ந்த ஏழு பேர், வாடகை மாருதி ஆம்னியில் ஊருக்கு வந்தனர்.மொடக்குறிச்சியைச் சேர்ந்த படையப்பா, 42, ஓட்டினார்.

மதியம் 12:15 மணியளவில் சிவகிரி அருகே பாரபாளையம் பகுதியில் வந்த போது, ஆம்னி மீது டாரஸ் லாரி மோதியது. இதில் ஆம்னி நொறுங்கி உருக்குலைந்தது. டிரைவர் படையப்பா மற்றும் 18 - 43 வயதுள்ள நான்கு பெண்கள் பலியாகினர். மூன்று ஆண்கள் பலத்த காயமடைந்தனர். மூவரும் மீட்கப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்கு காரணமான ஈரோடு, கே.கே. நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன், 41, என்பவரை சிவகிரி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவர் மது போதையில் இருந்தது தெரிந்தது.


வயதான தம்பதியை தாக்கி 16 பவுன் நகை கொள்ளை


கோவை: வயதான தம்பதியினரை தாக்கி மர்மநபர்கள் 16 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கோவை சுங்கம் பைபாஸ் அருகே உள்ள ஆல்வின் நகரில் வசிப்பவர் ராஜசேகர்,62. மனைவி சாந்தி,57.நேற்றிரவு முன் தினம் இரவு முகமூடி அணிந்த 4 பேர் இவர்களது வீட்டின் கதவை உடைத்து நுழைந்தனர். துாங்கி கொண்டிருந்த தம்பதியை, எழுப்பி பணம் மற்றும் நகை கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். பீரோவை உடைத்து 16 பவுன் நகை மற்றும் ரூ.2லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


மருத்துவ பரிசோதனைக்கு வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்


ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பரிசோதனையின் போது தப்பிச்சென்ற கைதியை போலீசார் தேடிவருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள காட்டுப்பள்ளியில் நவ., 17ல் தோப்பில் தங்கியிருந்தபெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக அப்பகுதியைச் சேர்ந்த சாகுல்அமீது மகன் மொட்டை என்ற சேக்உதுமான் 21 கைது செய்யப்பட்டார். அவரை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நேற்று போலீசார் ஏர்வாடி முருகன், உத்திரகோசமங்கை ராஜூ ஆகியோர் அழைத்து வந்தனர். அதற்கு முன்பாக சேக்உதுமானை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு உள்படுத்தினர். அங்கு கழிப்பறைக்குள் சென்ற சேக்உதுமான் தடுப்பு இல்லாத ஜன்னல் வழியாகத் தப்பி ஓடிவிட்டார். அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
20-நவ-202106:09:08 IST Report Abuse
NicoleThomson அருமையான தப்பிக்க வைக்கும் உத்தி என்று தோன்றுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X