பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்சல் வினியோக பகுதிகள் இடமாற்றம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
சென்னை-அஞ்சல் துறை வாயிலாக பொருட்கள் வினியோகம் செய்யும் சில பகுதிகள், இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன.சென்னை தெற்கு மண்டல மூத்த அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளர் மேஜர் திவ்யா தெரிவித்துஉள்ளதாவது:அஞ்சல் துறை வாயிலாக அனுப்பப்படும் விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல், சாதாரண அஞ்சல், பணவிடைகள் சரியான முறையில் வினியோகிப்பதை உறுதி செய்ய, சில வினியோக பகுதிகள், வரும் 22ம் தேதி முதல்

சென்னை-அஞ்சல் துறை வாயிலாக பொருட்கள் வினியோகம் செய்யும் சில பகுதிகள், இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன.சென்னை தெற்கு மண்டல மூத்த அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளர் மேஜர் திவ்யா தெரிவித்துஉள்ளதாவது:அஞ்சல் துறை வாயிலாக அனுப்பப்படும் விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல், சாதாரண அஞ்சல், பணவிடைகள் சரியான முறையில் வினியோகிப்பதை உறுதி செய்ய, சில வினியோக பகுதிகள், வரும் 22ம் தேதி முதல் மாற்றப்படுகின்றன.அதன்படி, இந்திரா நகர் 1-5 தெருக்கள், குறுக்கு தெருக்கள் மற்றும் 1-3 மேற்கு தெருக்கள் ஆகியவற்றுக்கு இதுவரை, ஆழ்வார் திருநகர் - 600 087 என்ற இடத்தில், வினியோக பணி மேற்கொள்ளப்பட்டது.இது, வரும் 22ம் தேதி முதல் விருகம்பாக்கம் - 600 092 என்ற இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், இனி 600 092 என்ற பின்கோடை சரியான வினியோகத்திற்கும், தகவல் தொடர்புக்கும் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X