பொது செய்தி

தமிழ்நாடு

புழல் உபரி கால்வாயில் சடலமாக மிதந்தவர் யார்?

Added : நவ 19, 2021
Share
Advertisement
மணலி-புழல் உபரி கால்வாயில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னையில் கன மழை எச்சரிக்கை காரணமாக, புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடிக்கும் அதிகமான உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று காலை ஆமுல்லைவாயில் தரைப்பாலம் அருகே, உபரி கால்வாயில் நீரோட்டத்திற்கு தடையாக இருந்த ஆகாய தாமரை செடிகளை, பொக்லைன் இயந்திரத்தால்

மணலி-புழல் உபரி கால்வாயில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னையில் கன மழை எச்சரிக்கை காரணமாக, புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடிக்கும் அதிகமான உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று காலை ஆமுல்லைவாயில் தரைப்பாலம் அருகே, உபரி கால்வாயில் நீரோட்டத்திற்கு தடையாக இருந்த ஆகாய தாமரை செடிகளை, பொக்லைன் இயந்திரத்தால் அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, ஆகாயதாமரை செடிகள் இடையே, 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்து வந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின், மணலி காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்தவர் யார்; உபரி கால்வாயில் மீன் பிடிக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தாரா; வேறு ஏதேனும் காரணமா என, மணலி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X