சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையிலிருந்து சென்னைக்கு பஸ்சில் கஞ்சா கடத்திய நபர் கைது

Added : நவ 19, 2021
Share
Advertisement
கோயம்பேடு-மதுரையில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கஞ்சா கடத்திய நபரை, போலீசார் கைது செய்தனர்.மதுரையில் இருந்து சென்னைக்கு பஸ் வாயிலாக, கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோயம்பேடு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இந்நிலையில், நேற்று காலை மதுரையில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்த பஸ்சில் இருந்து இறங்கிய பயணியரை

கோயம்பேடு-மதுரையில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கஞ்சா கடத்திய நபரை, போலீசார் கைது செய்தனர்.மதுரையில் இருந்து சென்னைக்கு பஸ் வாயிலாக, கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோயம்பேடு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இந்நிலையில், நேற்று காலை மதுரையில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்த பஸ்சில் இருந்து இறங்கிய பயணியரை கண்காணித்தனர்.அப்போது, கையில் பையுடன் வந்த வாலிபர் ஒருவர், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். அந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்த போது, பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.தொடர் விசாரணையில், பிடிபட்ட நபர் மதுரையை சேர்ந்த பாலமுருகன், 27, என தெரிய வந்தது. இவர், மதுரையில் உள்ள வீட்டில், மொத்தமாக கஞ்சா வாங்கி வைத்து, அந்த பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்துள்ளார்.மேலும், சென்னையில் கஞ்சா தேவைப்படுவோருக்கு, மதுரையில் இருந்து கஞ்சா எடுத்து வந்து, முகலிவாக்கத்தில் உள்ள வாடகை வீட்டில் தங்கி, வினியோகம் செய்து வந்தது தெரியவந்தது.இதையடுத்து, பாலமுருகனை கைது செய்த போலீசார், 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X