பொது செய்தி

இந்தியா

சிறந்த ஆளுமைக்கான விருது; ஹேமமாலினிக்கு அறிவிப்பு

Added : நவ 19, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சிம்லா: இந்த ஆண்டிற்கான சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது, நடிகை ஹேமமாலினி மற்றும் பாடலாசிரியர் பிரசூன் ஜோஷிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய திரைத் துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு, சிறந்த ஆளுமைக்கான விருது வழங்கப்படுவது வழக்கம். நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
Hema Malini, Prasoon Joshi,awarded,Film Personalities of the Year, IFFI

சிம்லா: இந்த ஆண்டிற்கான சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது, நடிகை ஹேமமாலினி மற்றும் பாடலாசிரியர் பிரசூன் ஜோஷிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய திரைத் துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு, சிறந்த ஆளுமைக்கான விருது வழங்கப்படுவது வழக்கம். நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான சிறந்த ஆளுமைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இது குறித்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது: இந்த ஆண்டிற்கான சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது, நடிகையும், மதுரா தொகுதி எம்.பி.,யுமான ஹேமமாலினி மற்றும் இந்திய திரைப்பட தணிக்கை குழு தலைவரும், பிரபல பாடலாசிரியருமான பிரசூன் ஜோஷிக்கும் வழங்கப்பட உள்ளது. கோவாவில் நடைபெற இருக்கும் 52வது சர்வதேச திரைப்பட விழாவில், இவர்கள் இருவருக்கும் இந்த விருது வழங்கி கவுரவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
19-நவ-202113:56:19 IST Report Abuse
S.Baliah Seer சமீபத்தில் ஹேமமாலினி தன்னுடைய 73-வது வயதில் ஆடிய டான்ஸ் ஒன்றைப் பார்த்து அரங்கே அதிர்ந்தது. திறமை மிக்க அவருக்கு சரியான பரிசுதான். வாழ்க பல்லாண்டு.
Rate this:
Cancel
THAMIRAMUM PAYANPADUM - india,இந்தியா
19-நவ-202111:29:08 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM பண ஒழிப்பு நடவடிக்கை போல நாட்டுக்கு இது தான் அத்தியாவசியம் வாழ்க அடுத்து காண்க வரிசையில் உள்ளார் யாரும் செய்ய முடியாத சேவை அவரை வெகுவாக பாராட்டலாம்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-நவ-202111:12:39 IST Report Abuse
J.V. Iyer கனவுக்கன்னி ஹேமமாலினிக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X