பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : நவ 19, 2021
Share
Advertisement
கஞ்சா வியாபாரியை தாக்கியோர் சிக்கினர்பள்ளிக்கரணை: கோவிலம்பாக்கம், இந்திரபுரியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, 31. கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவரிடம் கஞ்சா கேட்டு, நேற்று முன்தினம் கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், 25, வீரா, 34, தசரதன், 27, ஆகியோர் தகராறில் ஈடுபட்டு, பிளேடால் கழுத்தை அறுத்து தப்பினர். பள்ளிக்கரணை போலீசார் மூவரையும் கைது செய்தனர்.மளிகை கடை

கஞ்சா வியாபாரியை தாக்கியோர் சிக்கினர்பள்ளிக்கரணை: கோவிலம்பாக்கம், இந்திரபுரியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, 31. கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவரிடம் கஞ்சா கேட்டு, நேற்று முன்தினம் கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், 25, வீரா, 34, தசரதன், 27, ஆகியோர் தகராறில் ஈடுபட்டு, பிளேடால் கழுத்தை அறுத்து தப்பினர். பள்ளிக்கரணை போலீசார் மூவரையும் கைது செய்தனர்.மளிகை கடை உரிமையாளருக்கு 'காப்பு'பெரும்பாக்கம்: காரணையில் உள்ள ஒரு மளிகை கடையில், நேற்று முன்தினம் இரவு, பெரும்பாக்கம் போலீசார் சோதனை செய்தனர். 10 கிலோ குட்கா புகையிலை சிக்கியது. கடை உரிமையாளர் பாலமுருகன், 52, என்பவர் கைது செய்யப்பட்டார்.'போஸ்டர்' ஒட்டிய வாலிபருக்கு வெட்டுபுதுவண்ணாரப்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜ்கமல், 28. இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, தன் நண்பர் கார்த்திக் என்பவர் இறந்ததற்காக, வண்ணாரப்பேட்டை ஏ.இ., கோவில் தெருவில் 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டர் ஒட்டினார்.அங்கு வந்த மூவர், போஸ்டர் ஒட்டக் கூடாது என தகராறு செய்து, அவரை சரமாரியாக தாக்கினர். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து, கீரை தோட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ், 30, என்பவரை, நேற்று காலை கைது செய்தனர்; மற்ற இருவரை தேடி வருகின்றனர்.கூவத்தில் முதியவர் சடலம் மீட்புதிருவேற்காடு: திருவேற்காடு, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 70. இவர், சில தினங்களுக்கு முன், வீட்டில் இருந்து காணாமல் போனார். இந்நிலையில், நேற்று காலை திருவேற்காடு கூவம் ஆற்றில், அவரது சடலம் மிதந்தது. திருவேற்காடு போலீசார் சடலத்தை மீட்டு, மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X