பொது செய்தி

தமிழ்நாடு

வேளச்சேரியில் 100 மீட்பு படையினர் பொதுமக்கள் கடற்கரை செல்ல தடை

Added : நவ 19, 2021
Share
Advertisement
வேளச்சேரியில் 100 மீட்பு படையினர்பொதுமக்கள் கடற்கரை செல்ல தடைவெள்ள பாதிப்பால் தவிக்கும் மக்களை மீட்க, வேளச்சேரி பகுதியில், 100 தீயணைப்பு மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.நேற்று காலை முதல், சென்னை முழுவதும் கனமழை பெய்தது. கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதனால், பெசன்ட்நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, கானத்துார் கடற்கரை பகுதிக்கு சென்ற பொதுமக்களை,

வேளச்சேரியில் 100 மீட்பு படையினர்பொதுமக்கள் கடற்கரை செல்ல தடைவெள்ள பாதிப்பால் தவிக்கும் மக்களை மீட்க, வேளச்சேரி பகுதியில், 100 தீயணைப்பு மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.நேற்று காலை முதல், சென்னை முழுவதும் கனமழை பெய்தது. கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதனால், பெசன்ட்நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, கானத்துார் கடற்கரை பகுதிக்கு சென்ற பொதுமக்களை, போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர்.அடையாறு, வேளச்சேரி, தரமணி, கோட்டூர்புரம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி பகுதியில் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதால், வேளச்சேரி, செம்மஞ்சேரி, தரமணி போன்ற இடங்களுக்கு, ஆட்டோ, கால் டாக்சி செல்லவில்லை.இதனால், மாலை, பணி முடித்து வீடு திரும்பிய மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். கடந்த வாரம் பெய்த மழையில், வேளச்சேரி ராம்நகர், விஜயநகர், ஏ.ஜி.எஸ்.,காலனி, கல்கிநகர், அம்பேத்கார்நகர், பெரியார்நகர் பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.அதுபோன்ற பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, தீயணைப்புத்துறை மாநில பயிற்சி மைய இணை இயக்குனர் மீனாட்சிவிஜயகுமார் தலைமையில், 100 தீயணைப்பு மீட்பு படையினர், வேளச்சேரியில் முகாமிட்டுள்ளனர்.சென்னை தீயணைப்பு படையினருடன், மதுரை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மீட்பு படையினர் வந்துள்ளனர்.மீட்பு பணிக்காக ஏழு படகுகள், ஐந்து மீட்பு வாகனங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மிதவை உபகரணங்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X