பொது செய்தி

தமிழ்நாடு

ஏரி உபரி நீர் மூடு கால்வாயில் அடைப்பு வேளச்சேரியில் மீண்டும் வெள்ள அபாயம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
வேளச்சேரி--வேளச்சேரி ஏரியில் ஆகாய தாமரை, குப்பை கழிவுகள் முறையாக அகற்றப்படாததால், அவை உபரிநீர் செல்லும் மூடு கால்வாயில் தேங்கி, அடைப்பை ஏற்படுத்தி உள்ளது.வேளச்சேரி ஏரி, 55 ஏக்கர் பரப்பளவு உடையது. ஆலந்துார், ஆதம்பாக்கம், கிண்டி, மடுவாங்கரை உள்ளிட்ட பகுதியில் இருந்து வடியும் மழைநீர், இந்த ஏரியை அடைகிறது.இதோடு, கழிவு நீர் வெளியேற்று நிலையம் உட்பட, ஐந்து இடங்களில் இருந்து
 ஏரி உபரி நீர் மூடு கால்வாயில் அடைப்பு வேளச்சேரியில் மீண்டும் வெள்ள அபாயம்

வேளச்சேரி--வேளச்சேரி ஏரியில் ஆகாய தாமரை, குப்பை கழிவுகள் முறையாக அகற்றப்படாததால், அவை உபரிநீர் செல்லும் மூடு கால்வாயில் தேங்கி, அடைப்பை ஏற்படுத்தி உள்ளது.வேளச்சேரி ஏரி, 55 ஏக்கர் பரப்பளவு உடையது. ஆலந்துார், ஆதம்பாக்கம், கிண்டி, மடுவாங்கரை உள்ளிட்ட பகுதியில் இருந்து வடியும் மழைநீர், இந்த ஏரியை அடைகிறது.இதோடு, கழிவு நீர் வெளியேற்று நிலையம் உட்பட, ஐந்து இடங்களில் இருந்து கழிவு நீரும் ஏரியில் கலக்கிறது. இந்த ஏரியில் நிரம்பும் உபரிநீர், வீராங்கால் மூடு கால்வாய் வழியாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைகிறது.மூடு கால்வாய் பணி பாதியில் உள்ளது. இந்நிலையில், ஏரியில் வளர்ந்த ஆகாய தாமரை, குப்பை, மூடு கால்வாயில் சென்றதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், கால்வாயில் செல்ல வேண்டிய உபரி நீர், பாலாஜி காலனி பிரதான சாலை வழியாக, அஷ்டலட்சுமி நகர் தெருக்களில் புகும் அபாயம் உள்ளது.கால்வாயில், நீரோட்ட பாதை சீராக இருந்தால் தான், மூடு கால்வாய் பயனுள்ளதாக இருக்கும். ஏரி, கால்வாய் பொதுப்பணித்துறை வசம் இருந்தாலும், பராமரிப்பது யார் என்ற குழப்பம், நீண்ட காலமாக உள்ளது.இதனால், பாதிக்கப்படுவது வேளச்சேரி மக்கள் தான். ஏற்கனவே, வெள்ள பாதிப்பில் தத்தளிக்கும் வேளச்சேரி மக்களுக்கு, ஏரி உபரிநீர் கூடுதல் பாதிப்பாக அமையும்.இதை உணர்ந்து, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X