பொது செய்தி

தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து, உபரி நீர் வெளியேற்றம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
குன்றத்துார்--தொடர்ந்து மழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து, உபரி நீர் வெளியேற்றம் 3,000 கன அடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டதைத் தொடர்ந்து, செம்பரம்பாக்கம் உபரி நீர் வெளியேற்றம் 250 கன அடியில் இருந்து, நேற்று முன்தினம் 2,000 கன அடியாக உயர்த்தப்பட்டது.இந்நிலையில், நேற்று

குன்றத்துார்--தொடர்ந்து மழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து, உபரி நீர் வெளியேற்றம் 3,000 கன அடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டதைத் தொடர்ந்து, செம்பரம்பாக்கம் உபரி நீர் வெளியேற்றம் 250 கன அடியில் இருந்து, நேற்று முன்தினம் 2,000 கன அடியாக உயர்த்தப்பட்டது.இந்நிலையில், நேற்று காலை முதல் மழை பெய்து வருவதால், ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி ஏரிக்கு 2,870 கன அடி நீர் வந்தது. நீர் மட்டம் 20.65 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2.8 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. அதேநேரத்தில், தொடர்ந்து மழை பெய்வதால், நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், உபரி நீர் வெளியேற்றம் 3,000 கன அடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X