பொது செய்தி

தமிழ்நாடு

விமான சேவையில் எந்த பாதிப்புமில்லை

Added : நவ 19, 2021
Share
Advertisement
சென்னை--சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்த போதும், சென்னை விமான நிலைய விமான சேவையில், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் உட்பட, கடலோர வடமாவட்டங்களுக்கு, 'ரெட் அலெர்ட்' கொடுக்கப்பட்டது.இதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று

சென்னை--சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்த போதும், சென்னை விமான நிலைய விமான சேவையில், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் உட்பட, கடலோர வடமாவட்டங்களுக்கு, 'ரெட் அலெர்ட்' கொடுக்கப்பட்டது.இதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன் தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.இருப்பினும் சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 200க்கும் மேற்பட்ட விமான சேவைகள், தாமதமின்றி வழக்கம் போல் நேற்று செயல்பட்டன.மும்பை, கோல்கட்டா, பெங்களூரு நகரங்களுக்கான சில விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டது. அவை மழை காரணமாக இல்லை என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது நிலவும் வானிலைக்கேற்ப, சேவைகளில் மாற்றம் ஏற்படலாம். அவை பயணியருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். கடந்த முறை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது, ஆறு மணி நேரம் விமானங்கள் வருகை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X