பொது செய்தி

தமிழ்நாடு

படகுகளை பத்திரப்படுத்தும் மீனவர்கள்

Added : நவ 19, 2021
Share
Advertisement
எண்ணுார்-காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வடசென்னையில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. மீனவர்கள் படகுகளை பத்திரப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.சென்னை, எண்ணுாரில், முகத்துவாரகுப்பம், எண்ணுார்குப்பம், தாழங்குப்பம், நெட்டுகுப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம், இந்திராகாந்தி குப்பம், பாரதியார் நகர், ராமகிருஷ்ணா நகர் கடற்கரை ஆகிய குப்பங்கள் உள்ளன.திருவொற்றியூரில்,

எண்ணுார்-காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வடசென்னையில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. மீனவர்கள் படகுகளை பத்திரப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.சென்னை, எண்ணுாரில், முகத்துவாரகுப்பம், எண்ணுார்குப்பம், தாழங்குப்பம், நெட்டுகுப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம், இந்திராகாந்தி குப்பம், பாரதியார் நகர், ராமகிருஷ்ணா நகர் கடற்கரை ஆகிய குப்பங்கள் உள்ளன.திருவொற்றியூரில், கே.வி.கே., குப்பம், திருவொற்றியூர் குப்பம், ஒண்டிகுப்பம், திருச்சினாங்குப்பம், நல்லதண்ணீர் ஓடை குப்பம் என, 22 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு வசிப்போரின் பிரதான தொழில் மீன்பிடித்தல் ஆகும். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது.இதனால், எண்ணுார், திருவொற்றியூர், மணலி, மணலிபுதுநகர், காசிமேடு, ராயபுரம், புதுவண்ணை, வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி உட்பட வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில், அவ்வப்போது பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது.குறிப்பாக, எண்ணுார் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மதியம் சூறாவளி காற்றுடன் கன மழை கொட்டியதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் திணறினர். லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.மீனவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பைபர் படகுகள், சிறிய படகுகளை, சக மீனவர்கள் உதவியுடன் தோளில் சுமந்து வந்து, கடற்கரைகளில் இருந்து, தார் சாலைகளில் பத்திரப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X