சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வட மாநில வாலிபருக்கு கத்திக்குத்து வழிப்பறி திருடர்கள் அட்டூழியம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
மணலி-பணம் பறிக்க முயன்ற 'லிப்ட்' கொடுப்பது போல் நடித்து, வடமாநில வாலிபரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.மணலி, சின்னசேக்காடு, கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் பாதல் பெகரா, 27; ஓட்டல் தொழிலாளி. கடந்த 8ம் தேதி இரவு 10:30 மணிக்கு, வேலை முடித்து வீட்டிற்கு சென்றார்.சின்னசேக்காடு ராஜு தெரு அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், லிப்ட் கொடுப்பது போல, பாதல் பெகராவை அழைத்து

மணலி-பணம் பறிக்க முயன்ற 'லிப்ட்' கொடுப்பது போல் நடித்து, வடமாநில வாலிபரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.மணலி, சின்னசேக்காடு, கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் பாதல் பெகரா, 27; ஓட்டல் தொழிலாளி. கடந்த 8ம் தேதி இரவு 10:30 மணிக்கு, வேலை முடித்து வீட்டிற்கு சென்றார்.சின்னசேக்காடு ராஜு தெரு அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், லிப்ட் கொடுப்பது போல, பாதல் பெகராவை அழைத்து சென்றுள்ளனர்.பின், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில், இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, பாதல் பெகராவை இறக்கி, கத்தியை காட்டி மிரட்டி, பணம் மற்றும் மொபைல் போன் கேட்டு மிரட்டினர்.அவரிடம் பணம் மற்றும் மொபைல்போன் இல்லாததால், ஆத்திரமடைந்த வாலிபர்கள், கை மற்றும் கத்தியால் அவரை பலமாக தாக்கி தப்பினர்.இது குறித்து, மணலி போலீசார் விசாரித்தனர். இதில், ராயபுரத்தைச் சேர்ந்த தபிருல்லா, 26, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன், 24, ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து, இரு சக்கர வாகனம் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், இவர்கள் மீது, பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. பின், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X