தேசிய நெடுஞ்சாலைகள் சேதம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

Added : நவ 19, 2021
Share
Advertisement
சென்னை--சென்னையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மழையால் சேதம் அடைந்துள்ளதால், போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் உள்ளனர்.சென்னை- - திருச்சி, சென்னை - -பெங்களூரு, சென்னை - -கோல்கட்டா, சென்னை- - திருப்பதி, சென்னை பைபாஸ், வடக்கு நுாறடிச்சாலை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகளவில் போக்குவரத்து உள்ளது.இச்சாலைகளை, சரக்கு

சென்னை--சென்னையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மழையால் சேதம் அடைந்துள்ளதால், போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் உள்ளனர்.சென்னை- - திருச்சி, சென்னை - -பெங்களூரு, சென்னை - -கோல்கட்டா, சென்னை- - திருப்பதி, சென்னை பைபாஸ், வடக்கு நுாறடிச்சாலை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகளவில் போக்குவரத்து உள்ளது.இச்சாலைகளை, சரக்கு வாகனங்கள், அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், கன்டெய்னர் லாரிகள், கார்கள் மட்டு மின்றி இருசக்கர வாகனங்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. இச்சாலைகளில், வானகரம், சூரப்பட்டு, நல்லுார், மாத்துார் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு வெளியே பரனுார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன.இந்த சுங்கச்சாவடிகள் வாயிலாக மாதந்தோறும் 50 கோடி ரூபாய் அளவிற்கு கட்டணம் வசூலாகிறது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, மாதவரம் ரவுண்டானா - -நல்லுார் இடையிலான சென்னை- - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை 70 சதவீத அளவிற்கு சேதம் அடைந்துள்ளன.வடகரை, செங்குன்றம், காவாங்கரை, புழல் சிறை, சென்னை பைபாஸ் சந்திப்பு என பல இடங்களில் அபாய பள்ளங்கள் உருவாகியுள்ளன.அதேபோல், சென்னை- - பெங்களூரு சாலையில், மதுரவாயல் முதல் பூந்தமல்லி வரை பல இடங்களில் அபாய பள்ளங்கள் உருவாகி உள்ளன. காலமுறை புதுப்பிப்பு பணிகள் நடக்காததால், வடக்கு நுாறடிச்சாலை மாதவரம் முதல் மணலி சந்திப்பு வரை முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.சென்னை பைபாஸ் சாலையில் ஆங்காங்கே சிறிய மற்றும் பெரிய பள்ளங்கள் அதிகளவில் உள்ளன. இதனால், வேகமாக வரும் வாகனங்கள் தட்டுதடுமாறி சென்று விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. இச்சாலைகளில் தற்காலிக சீரமைப்பு பணிகளை கூட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ளவில்லை.கட்டண வசூல் தொடர்ந்து நடக்கிறது. இது வாகன ஓட்டிகள், பயணியர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X