பொது செய்தி

தமிழ்நாடு

16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நள்ளிரவு 1.30 மணி முதல், சென்னை - புதுச்சேரி இடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம்
TN rain, School Leave, College Leave

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நள்ளிரவு 1.30 மணி முதல், சென்னை - புதுச்சேரி இடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க துவங்கியது. இதனால் கடலோர பகுதிகளில் மட்டும் பலத்த காற்று வீசி வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். புதுச்சேரி, காரைகாலிலும், கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


* சென்னை
* திருவள்ளூர்
* காஞ்சிபுரம்
* நீலகிரி
* விழுப்புரம்
* வேலூர்
* ராணிப்பேட்டை
* கள்ளக்குறிச்சி
* பெரம்பலூர்
* திருப்பத்தூர்
* சேலம்
* தருமபுரி
* கிருஷ்ணகிரி


பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


* கடலூர்
* செங்கல்பட்டு
* அரியலூர்

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X