பெங்களூரு-' தாமதமாக வரும் பேராசிரியர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும்' என பெங்களூரு பல்கலைக்கழகம் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.பெங்களூரு பல்கலைக்கழகத்தின் சார்பில் அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் சரியான நேரத்துக்கு பல்கலைக்கழகத்துக்கு வருகை தருவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பலரும், தாமதமாக வருவதும், வருகை பதிவேட்டில் முறையாக குறிப்பிடாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் புதிய விதிமுறை போடப்பட்டு, அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:புதிய விதிமுறையின்படி, அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்களின் வருகை தீவிரமாக கண்காணிக்கப்படும். அவர்களுக்கான உணவு இடைவெளி மதியம் 1.30 முதல், 2:00 மணி வரை தான். அதுதவிர, கூடுதல் 10 நிமிடங்கள் விடப்படும். இவ்வாறு வழங்கப்பட்ட நேரத்தை விடவும் தாமதமாக திரும்புவோரின் விடுப்பிலிருந்து அரைநாள் கழிக்கப்படும். அவர்களுக்கு போதுமான விடுப்பு இல்லாத பட்சத்தில், அவர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும். இதை தவறாமல் அனைத்து அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் பின்பற்றுவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், அவசர கால தேவைக்கு வெளியில் செல்பவர்களும் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.இவ்வாறு கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE