பொது செய்தி

இந்தியா

உயர்துவக்கப்பள்ளியின் தரத்தை உயர்த்த கோரிக்கை

Added : நவ 19, 2021
Share
Advertisement
தட்சிணகன்னடா-தட்சிணகன்னடா மாவட்டத்திலுள்ள உயர்துவக்கப்பள்ளியின் தரத்தை உயர்த்த கோரி, மாணவர்களை இரண்டு நாட்களாக பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் நுாதன போராட்டம் நடத்துகின்றனர்.தட்சிணகன்னடா மாவட்டம், சுல்லியா தாலுகாவைச் சேர்ந்த ஹரிஹரா பல்லதக்கா கிராமத்தின் அரசு பள்ளி உயர்துவக்கப்பள்ளியில், தொடர்ந்து இரண்டு நாட்களாக மாணவர்களின் வருகை பதிவு இல்லை. இதுகுறித்து

தட்சிணகன்னடா-தட்சிணகன்னடா மாவட்டத்திலுள்ள உயர்துவக்கப்பள்ளியின் தரத்தை உயர்த்த கோரி, மாணவர்களை இரண்டு நாட்களாக பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் நுாதன போராட்டம் நடத்துகின்றனர்.தட்சிணகன்னடா மாவட்டம், சுல்லியா தாலுகாவைச் சேர்ந்த ஹரிஹரா பல்லதக்கா கிராமத்தின் அரசு பள்ளி உயர்துவக்கப்பள்ளியில், தொடர்ந்து இரண்டு நாட்களாக மாணவர்களின் வருகை பதிவு இல்லை. இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் பெற்றோரிடம் விசாரித்தபோது, மாணவர்களுக்கு தரமான கிடைக்க வேண்டுமெனவும், பள்ளியின் கல்வி மற்றும் கட்டமைப்பு தரத்தை உயர்த்தினால் மட்டுமே அவர்களை பள்ளிக்கு அனுப்புவோம் என பெற்றோர் கூறியுள்ளனர். தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர்கள், பெற்றோரை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டனர். விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அறிவித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப கேட்டுக்கொண்டனர். மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: கல்வித்துறை அதிகாரிகள் கூறினாலும், பள்ளிக்கு நிரந்தரமான ஆசிரியர், முறையான கட்டமைப்பு, உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். பள்ளியின் தரத்தை உயர்த்தினால் மட்டுமே மாணவர்களை அனுப்புவோம்.இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X