'செல்பி' எடுக்கும் போது, இளைஞர் ஒருவர் கால் தவறி காவிரி ஆற்றில் விழுந்து உயிரிழப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
பெங்களூரு-'செல்பி' எடுக்கும் போது, இளைஞர் ஒருவர் கால் தவறி காவிரி ஆற்றில் விழுந்து உயிரிழந்தார். பெங்களூரின் காந்தி நகரில், பார் ஒன்றில் பணியாற்றி வந்தவர் அபிஷேக், 19. இவர் பூஜை நிமித்தமாக, நவம்பர் 8ல், மாண்டியாவின் பாண்டவபுராவுக்கு, நண்பர்களுடன் ரயிலில் சென்று கொண்டிருந்தார். ஸ்ரீரங்கப்பட்டணா அருகில், காவிரி ஆற்றின் பாலத்தின் மீது ரயில் சென்ற போது கதவருகில்

பெங்களூரு-'செல்பி' எடுக்கும் போது, இளைஞர் ஒருவர் கால் தவறி காவிரி ஆற்றில் விழுந்து உயிரிழந்தார். பெங்களூரின் காந்தி நகரில், பார் ஒன்றில் பணியாற்றி வந்தவர் அபிஷேக், 19. இவர் பூஜை நிமித்தமாக, நவம்பர் 8ல், மாண்டியாவின் பாண்டவபுராவுக்கு, நண்பர்களுடன் ரயிலில் சென்று கொண்டிருந்தார். ஸ்ரீரங்கப்பட்டணா அருகில், காவிரி ஆற்றின் பாலத்தின் மீது ரயில் சென்ற போது கதவருகில் நின்றபடி, தன் மொபைலில் செல்பி எடுக்க முற்பட்டார். இவ்வேளையில் கால் தவறி, ஆற்றில் விழுந்தார்.நடந்ததை தெரிந்து கொள்ளாத நண்பர்கள், பாண்டவபுராவில் ரயிலிருந்து இறங்கி, அபிஷேக்கை தேடினர். அவரை காணாததால் பெங்களூருக்கு திரும்பினர்.ஊருக்கு சென்ற மகன் வீடு திரும்பாததால், பீதியடைந்த அபிஷேக்கின் பெற்றோர், உப்பார்பேட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்த போது, நண்பர்களுடன் சென்றது தெரிந்தது. அவர்களை கண்டுபிடித்து விசாரித்த போது, ஸ்ரீரங்கப்பட்டணா ரயில் நிலையத்துக்கு பின், அவரை காணவில்லை என கூறினர். மாண்டியா போலீசாரின் உதவியுடன், அவரை காவிரி ஆற்றில் தேடிய போது, ஸ்ரீரங்கப்பட்டணா அருகில், அபிஷேக்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X