பாம்பாட்டி போல பேசும்சித்தராமையா: ஸ்ரீராமுலு| Dinamalar

பாம்பாட்டி போல பேசும்சித்தராமையா: ஸ்ரீராமுலு

Added : நவ 19, 2021
Share
கதக்-"எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா புதிய டிரென்ட்டை உருவாக்கியுள்ளார். தேவையற்ற பேச்சுகளை பேசுகிறார்," என சமூக நலத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்தார். கதக்கில் அவர் நேற்று கூறியதாவது:சித்தராமையாவை ஏற்க, அவரது கட்சியினரே தயாராக இல்லை. சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில், சிவகுமாருக்கு ஆதரவாக கோஷமிட்டதால், சித்தராமையா நிகழ்ச்சியிலிருந்து

கதக்-"எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா புதிய டிரென்ட்டை உருவாக்கியுள்ளார். தேவையற்ற பேச்சுகளை பேசுகிறார்," என சமூக நலத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்தார். கதக்கில் அவர் நேற்று கூறியதாவது:சித்தராமையாவை ஏற்க, அவரது கட்சியினரே தயாராக இல்லை. சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில், சிவகுமாருக்கு ஆதரவாக கோஷமிட்டதால், சித்தராமையா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். பாம்பாட்டி போன்று, சித்தராமையா பேசுகிறார். அரசுக்கு எதிராக அலை எழுந்துள்ளது, பா.ஜ., அடித்து செல்லும் என்கின்றனர். ஆனால் உண்மையில், காங்கிரசாருக்கு எதிராகத்தான் சூறாவளி, சுனாமி எழுந்துள்ளது. 2023ன் தேர்தல் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலவை தேர்தலிலேயே, காங்கிரஸ் அடித்து சென்றுவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X