செக்போஸ்ட்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

செக்போஸ்ட்

Added : நவ 19, 2021
Share
வாடகை வசூல் என்னாச்சு?'கோல்டு' விளையும் சிட்டியின் முனிசி.,யில் தலைவர் பதவிக்கு கைகாரங்க ஐந்து பேர் போட்டியில் இருந்தாங்க. இவர்களில் ஒருத்தரை தலைவராக்கினாங்க.அவரோட 'நம்பிக்கை' ஒண்ணே போதுமென நிலைக்குழு தலைவர் தேர்தலை நடத்தாமலேயே ஒரு வருஷத்தை கடந்துட்டாங்க. நகராட்சி வேலைகளில் வேகத்தை விட விவேகம் இருக்குதாம்.ரா.பேட்டை, ஆ.பேட்டை மார்க்கெட் மூலம் கிடைக்க வேண்டிய

வாடகை வசூல் என்னாச்சு?'கோல்டு' விளையும் சிட்டியின் முனிசி.,யில் தலைவர் பதவிக்கு கைகாரங்க ஐந்து பேர் போட்டியில் இருந்தாங்க. இவர்களில் ஒருத்தரை தலைவராக்கினாங்க.அவரோட 'நம்பிக்கை' ஒண்ணே போதுமென நிலைக்குழு தலைவர் தேர்தலை நடத்தாமலேயே ஒரு வருஷத்தை கடந்துட்டாங்க. நகராட்சி வேலைகளில் வேகத்தை விட விவேகம் இருக்குதாம்.ரா.பேட்டை, ஆ.பேட்டை மார்க்கெட் மூலம் கிடைக்க வேண்டிய வருமானத்துக்கு வழி தேடாமல், சைலண்ட் மோடில் இருக்குறாங்கன்னு நிர்வாக அதிகாரம் தெரிந்தவங்க வருவாய்த் துறை அமைச்சகத்துக்கும் நகராட்சிக்கும் போட்டுக் கொடுத்திருக்காங்க.வியாபாரிங்க கடையின் வாடகை செலுத்த தயாராக இருந்தும், பணம் வசூலிக்காமல் இருப்பது பெருந்தவறல்லவா? இது மாவட்ட கலெக்டர் கவனத்துக்கு போகலையா?. நகராட்சியின் குளறுபடியால் 'சூப்பர் செட்' தான் முடிவா?வேலி போட தயங்குறாங்க?முனிசி.,க்கு சொந்தமான காலி மனை, நிலம் எங்கெங்கு இருக்குதென வெறும் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்தால் போதும்னு இருப்பதால், அதிகாரிகளின் அட்ஜெஸ்ட்மென்ட்டில் நிலத்தை சுருட்டி ஏப்பமிடும் கும்பலுக்கு வசதியாக இருந்து வருது.இப்புடித்தான், கவுதம புத்தரின் பெயரில் உருவான நகரத்தில் நகராட்சிக்கு சொந்தமான பல நுாறு வீட்டு மனைகளை, 'ஸ்வாஹா' செய்திருக்காங்க. அதை லட்சம் லட்சமாக வாங்கி குவித்தவங்க சிக்கவில்லை. ஆனால் பணம் கொடுத்து, போலி ஆவணம் வாங்கி வீடுகள் கட்டினவங்க தான் சிக்கலில் அவதிபடுறாங்க.இன்னும் எங்கெல்லாம் காலி மனைகள் சொந்தமா இருக்குதோ அதை பத்திர படுத்த வேலி அமைக்க வேணும்னு கூட்டத்தில் சிலர் பேசுவதோடு மறந்திடுறாங்க. தீர்மானம் ஆகிட்டதா நினைக்குறாங்க. எதுவுமே அமலுக்கு வரலையே.மிக நேர்மையான நகராட்சி நிர்வாகம் நடத்துவதா சிலர் பெருமை பேசுறவங்க எதுக்கு நகராட்சி நிலத்தை பாதுகாக்க வேலி போட தயங்குறாங்க?உறங்கும் யு.பி.எஸ்.,தங்கவயல் தாசில்தார் அலுவலகத்தில் எந்நேரமும் மின் வசதி இருக்க வேண்டும் என்பதால், யுபிஎஸ் ஏற்படுத்தி இருந்தாங்க.ஆனால், இந்த யுபிஎஸ் பேட்டரி பழுதடைந்து ரெண்டு வருஷம் கடந்து போயும் இன்னும் பழுது பார்க்கவே இல்லை.மின் தடை அடிக்கடி ஏற்படுவது வழக்கம் தான். இதை காரணம் காட்டி கம்ப்யூட்டர் வேலை செய்யலன்னு எல்லா வேலைகளையும் துாங்க செய்றாங்க. தாசில்தார் அலுவலகத்தில் பொறுப்பு இல்லா ஆபிசர்கள் துாங்குவதற்கு வசதியா, மின்வசதியும் துாங்கணுமா?

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X