விவசாயி பணம் திருட்டு

Added : நவ 19, 2021
Share
Advertisement
சாம்ராஜ்நகர்-நிலம் வாங்குவதற்காக விவசாயி வைத்திருந்த பணத்தை, மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து திருடி சென்றனர்.சாம்ராஜ்நகர் அருகே உள்ள அச்செட்டிபுராவை சேர்ந்தவர் நாகய்யா, 50. விவசாயியான இவர் துண்டே கவுடா என்பவரது நிலத்தை வாங்குவதற்காக நேற்று சாம்ராஜ்நகரில் தாலுகா சார் பதிவாளர் அலுவலகத்துக்கு, 9.50 லட்சம் ரூபாயுடன் வந்தார். நிலப்பத்திர பதிவு முடிந்தவுடன் நாகய்யா

சாம்ராஜ்நகர்-நிலம் வாங்குவதற்காக விவசாயி வைத்திருந்த பணத்தை, மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து திருடி சென்றனர்.சாம்ராஜ்நகர் அருகே உள்ள அச்செட்டிபுராவை சேர்ந்தவர் நாகய்யா, 50. விவசாயியான இவர் துண்டே கவுடா என்பவரது நிலத்தை வாங்குவதற்காக நேற்று சாம்ராஜ்நகரில் தாலுகா சார் பதிவாளர் அலுவலகத்துக்கு, 9.50 லட்சம் ரூபாயுடன் வந்தார். நிலப்பத்திர பதிவு முடிந்தவுடன் நாகய்யா மற்றும் துண்டே கவுடா ஆகிய இருவரும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட காரில் சென்றனர். காரின் உள்ளே பணத்தை வைத்து விட்டு உள்ளே இருவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பணத்தை திருடி சென்றனர். நாகய்யா வெளியில் வந்தபோது பணம் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சாம்ராஜ்நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X