சின்ன சின்னதாய்.

Added : நவ 19, 2021 | |
Advertisement
சின்ன சின்னதாய்நிரம்புகிறது எரகோள் அணைகுடிநீருக்காக ஏற்படுத்தப்பட்ட எரகோளா அணை நிரம்பும் நிலையில் உள்ளது. பங்கார்பேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட எரகோள் என்ற இடத்தில் புதியதாக அணை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடத்த வேண்டியது மட்டுமே பாக்கி. இந்நிலையில், பளமந்தி, காமசமுத்ரா கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து மழைநீர் அணைக்கு வந்து சேர்ந்த

சின்ன சின்னதாய்நிரம்புகிறது எரகோள் அணைகுடிநீருக்காக ஏற்படுத்தப்பட்ட எரகோளா அணை நிரம்பும் நிலையில் உள்ளது. பங்கார்பேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட எரகோள் என்ற இடத்தில் புதியதாக அணை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடத்த வேண்டியது மட்டுமே பாக்கி. இந்நிலையில், பளமந்தி, காமசமுத்ரா கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து மழைநீர் அணைக்கு வந்து சேர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் பங்கார்பேட்டை, மாலுார், கோலார் தாலுகாவினருக்கு குடிநீர் கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பா.ஜ., உறுப்பினர்கள் கூட்டம்கோலார், சிக்கபல்லாப்பூர் இரு தொகுதிகளுக்கு உட்பட்ட எம்.எல்.சி., தேர்தல் குறித்து பங்கார்பேட்டை தொகுதி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கட் முனியப்பா தலைமையில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், டவுன் சபை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கட்சி மேலிடம் அறிவிக்கும் எம்.எல்.சி., கான வேட்பாளரை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்பது குறித்து தீர்மானித்தனர்.மழையால் ரூ.35 கோடி நஷ்டம்தொடர்ந்து பெய்து வரும் மழையால் பங்கார்பேட்டையில் 35 கோடி ரூபாய் மதிப்பிலான கேழ்வரகு, காய் கறிகள் நாசமானதாக தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமி தெரிவித்தார். பங்கார்பேட்டையில் நேற்று அவர் கூறுகையில், ''தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அறுவடை செய்ய இருந்த 14 ஆயிரம் ஏக்கர் கேழ்வரகு பாழானது. தக்காளி உட்பட காய்கறிகளும் நாசமானது. பயிர்கள் நாசமானதற்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்,'' என்றார்.தங்கவயலில் பலத்த மழைதங்கவயலில் தொடர்ந்து ஓயாமல், பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சொடி காணப்படுகிறது. மாலை 4:00 மணிக்கெல்லாம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மார்கெட் வியாபாரமும் முடங்கியது. ஆட்டோக்கள் இயங்கவில்லை. தொடர்ந்து, 21 வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஆயினும், தங்கவயலில் மழை பாதிப்புக்கு கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்த வில்லை. ஆனால், மின்சார தொடர்பாக பாதிப்பு ஏற்பட்டால், பெஸ்காம் உதவிக்கு, 08153 260236 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.துரோகிகளுக்கு 'சீட்' தராதீர்!கோலார் வட்டார காங்கிரஸ் சார்பில் கோலார் மாவட்ட பிரஸ் பவனில் அதன் தலைவர் சீனிவாஸ் கூறுகையில், ''லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு விரோதமாக செயல்பட்ட துரோகிகளுக்கு கோலார் தொகுதி எம்.எல்.சி., தேர்தலில் கட்சி மேலிடம் சீட் வழங்க கூடாது.''காங்கிரசை தோற்கடித்தவர்களுக்கு எம்.எல்.சி., தேர்தலில் கட்சி மேலிடம் சீட் தருவது, நமக்கு நாமே வெட்டிக்கொள்ளும் சவக்குழி. ''எளிதாக பெற வேண்டிய வெற்றியை இழக்க வேண்டி இருக்கும். கட்சியின் விசுவாசிகளுக்கு சீட் தருவது காங்கிரசின் தன்மானத்துக்கு கிடைத்த நன்மதிப்பாக இருக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X