பொது செய்தி

இந்தியா

கோலாரில் இந்து அமைப்பினர் பந்த்

Added : நவ 19, 2021
Share
Advertisement
கோலார்--கோலாரில் ஹிந்து அமைப்பினர் நேற்று அமைதியான முறையில் பந்த் நடத்தினர். நகரமே வெறிச் சோடியது.இம்மாதம் 13ல் சிக்கமகளூரு தத்த பீடத்துக்கு மாலை அணிந்து, பக்தர்கள் கோலாரில் இருந்து சென்று கொண்டிருந்த போது, கோலார் மணிக்கூண்டு அருகில் கும்பல் ஒன்று கல்வீச்சு நடத்தியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலை கண்டித்து, ஹிந்து அமைப்பினர் நேற்று முன் தினம்

கோலார்--கோலாரில் ஹிந்து அமைப்பினர் நேற்று அமைதியான முறையில் பந்த் நடத்தினர். நகரமே வெறிச் சோடியது.இம்மாதம் 13ல் சிக்கமகளூரு தத்த பீடத்துக்கு மாலை அணிந்து, பக்தர்கள் கோலாரில் இருந்து சென்று கொண்டிருந்த போது, கோலார் மணிக்கூண்டு அருகில் கும்பல் ஒன்று கல்வீச்சு நடத்தியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலை கண்டித்து, ஹிந்து அமைப்பினர் நேற்று முன் தினம் கண்டன ஊர்வலம் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நேற்று பந்த் போராட்டம் நடத்தினர்.கொட்டும் மழையிலும் காவி கொடிகளுடன் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.வர்த்தக நிறுவனங்கள், உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டது. பள்ளி கல்லுாரிகளும் இயங்க வில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.ஸ்ரீ ராம சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் கோலாரில் போராட்டம் நடத்த கோலார் மாவட்ட கலெக்டர் தடை விதித்திருந்தார்.தடையை மீறி கோலாருக்கு வந்த பிரமோத் முத்தாலிக்கை கோலாரின் எல்லைப் பகுதியான ராமச்சந்திரா என்ற இடத்தில், போலீசார் கைது செய்தனர். அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X