தேசிய பூங்காவிலிருந்து, உணவு தேடி ஊருக்குள் வந்த ஆறு காட்டு யானைகள்

Added : நவ 19, 2021
Advertisement
மைசூரு-நாகரஹொளே தேசிய பூங்காவிலிருந்து, உணவு தேடி ஊருக்குள் வந்த ஆறு காட்டு யானைகள், காட்டுக்கு திரும்பாமல் ஹூனசேகட்டே வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இதனால் சுற்றுப்பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர். மைசூரு ஹூனசூரின், தேசிய பூங்காவிலிருந்து, நேற்று அதிகாலை ஆறு காட்டு யானைகள், காளேனஹள்ளி கிராமத்தின் நிலத்தில் நுழைந்தன. இதை கண்ட விவசாயிகள், கிராமத்தினரிடம் விஷயத்தை

மைசூரு-நாகரஹொளே தேசிய பூங்காவிலிருந்து, உணவு தேடி ஊருக்குள் வந்த ஆறு காட்டு யானைகள், காட்டுக்கு திரும்பாமல் ஹூனசேகட்டே வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இதனால் சுற்றுப்பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர். மைசூரு ஹூனசூரின், தேசிய பூங்காவிலிருந்து, நேற்று அதிகாலை ஆறு காட்டு யானைகள், காளேனஹள்ளி கிராமத்தின் நிலத்தில் நுழைந்தன. இதை கண்ட விவசாயிகள், கிராமத்தினரிடம் விஷயத்தை தெரிவித்தனர். அவர்கள் யானைகளை சுற்றி வளைத்து, கூச்சலிட்டு, விசிலடித்து காட்டுக்குள் விரட்ட முயற்சித்தனர். யானைகள் அசையவில்லை. கற்களை வீசியதால் பீதியடைந்த யானைகள், அங்கேயே சுற்றி வந்தன. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர், காளேனஹள்ளி நிலம் அருகில் சென்று, 10:00 மணிவரை காட்டுக்கு விரட்ட முயற்சித்தும் பயனில்லை. அங்குமிங்கும் ஓடிய யானைகளின் பின், ஏராளமான மக்கள் குவிந்து கூச்சலிட்டதால், யானைகளை காட்டுக்குள் விரட்டும் நடவடிக்கைக்கு, இடையூறாக இருந்தது. மக்களின் கூச்சலால் மிரண்ட யானைகள், குருபுரா ஹூனசேகட்டே வனப்பகுதிக்குள் நுழைந்தன. இதனால் சுற்றுப்புற விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X