பொது செய்தி

இந்தியா

சில வரி செய்திகள்..

Added : நவ 19, 2021
Share
Advertisement
அதிகாலையில் போலீசார் வசூல்பெங்களூரு:பெங்களூரு மாரத்தஹள்ளி பாலத்தின் அருகில் நேற்று காலையில் ஹொய்சாலா ரோந்து வாகனத்தில் வந்த ஏட்டு குருமூர்த்தி, 35 என்பவர் அங்குள்ள பான் கடை பெண்ணிடம் மாமூல் வாங்கி கொண்டு புறப்பட்டார். இதை அங்கிருந்த வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்ததோடு, போலீஸ் வாகனத்தை நிறுத்தி, அவரிடம் ஏன் பணத்தை வாங்கினீர்கள் திருப்பி தாருங்கள் என்றார். இதனால்

அதிகாலையில் போலீசார் வசூல்பெங்களூரு:பெங்களூரு மாரத்தஹள்ளி பாலத்தின் அருகில் நேற்று காலையில் ஹொய்சாலா ரோந்து வாகனத்தில் வந்த ஏட்டு குருமூர்த்தி, 35 என்பவர் அங்குள்ள பான் கடை பெண்ணிடம் மாமூல் வாங்கி கொண்டு புறப்பட்டார். இதை அங்கிருந்த வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்ததோடு, போலீஸ் வாகனத்தை நிறுத்தி, அவரிடம் ஏன் பணத்தை வாங்கினீர்கள் திருப்பி தாருங்கள் என்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த குருமூர்த்தி அந்த பெண்ணை அழைத்து பணத்தை திருப்பி கொடுத்து விட்டு சென்றார்.இன்னும் கிடைக்காத ஸ்ரீகிருஷ்ணா!பெங்களூரு: 'பிட் காயின்' ஸ்ரீகிருஷ்ணா உயிருக்கு ஆபத்து உள்ளது காங்கிரஸ் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் அவருக்கு பாதுகாப்புக்கு இரண்டு போலீசாரை நியமித்துள்ளார். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணா வீட்டுக்கு நான்கு நாட்களாக சென்றும் கிடைக்கவில்லை. எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை. யாராவது கடத்தி சென்றுள்ளனரா அல்லது சக கூட்டாளியான ராபின் கன்டலை தேடி சென்றுள்ளாரா என்பது மர்மமாக உள்ளது. நள்ளிரவில் பற்றி எரிந்த கார்பெங்களூரு: பெங்களூரு மஞ்சுநாத் நகரில் நேற்று அதிகாலை 2:00 மணி அளவில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். அப்போது கார் திடீரென வெடித்ததில் தீயணைப்பு படையின் மூன்று வீரர்கள் காயம் அடைந்தனர். தீ விபத்தில் அருகில் உள்ள வாகனங்கள், வீடு சேதம் அடைந்தது. சித்தராமையாவுக்கு காக்கை கண்டம்!பெங்களூரு: கடந்த ஐந்து ஆண்டுக்கு முன் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் காரின் மீது காகம் ஒன்று அமர்ந்தது. இதனால் அவர் அந்த காரை விற்று விட்டு வேறு கார் வாங்கினார். தற்போது விதான் சவுதாவில் உள்ள அவரது அலுவலகத்தின் பெயர் பலகை மீது காகம் வந்து அமர்ந்து சென்றுள்ளது. இதனால் சித்தராமையாவுக்கு சனி பகவான் தொல்லை இருப்பதாக தொண்டர்கள் கூறுகின்றனர்.சிறுத்தை தாக்கி விவசாயி காயம்மைசூரு: மைசூரு எச்.டி.கோட்டே பீரம்பள்ளியில் சித்தப்பா, 48 என்பவர தன் தோட்டத்தில் நேற்று காலை வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் தலை, தொடையில் தீவிர காயம் அடைந்த சித்தப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தவறை சரி செய்த கே.எஸ்.ஆர்.டி.சி., விஜயநகரா: 'பத்மஸ்ரீ' விருது பெற்ற திருநங்கை மாதா மஞ்சம்மா ஜோகதியை பெருமைப்படுத்தும் விதமாக விஜயநகரா மாவட்டத்தில் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் டிக்கெட்களில் அவரது பெயர் அச்சிட்டது.அதில் அவரை கவுரப்படுத்தும் வாசகம் இல்லாமல் அரைகுறையாக “பத்மஸ்ரீ விருது பெற்ற திருநங்கை மாதா மஞ்சம்மா ஜோகதிக்கு” என மட்டுமே அச்சிடப்பட்டு இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தவறை திருத்த சரி செய்த கே.எஸ்.ஆர்.டி.சி, 'பத்மஸ்ரீ விருது பெற்ற மாத மஞ்சம்மா ஜோகதிக்கு வாழ்த்துக்கள்' என முழுமையாக அச்சிட்டுள்ளது.நடிகர் துனியா விஜய் தந்தை மரணம்பெங்களூரு: நடிகர் துனியா விஜய் தந்தை ருத்ரப்பா, 81. இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் அடக்கம் ஆனேக்கல் அருகே உள்ள கும்பாரஹள்ளியில் இன்று நடக்கிறது.துனியா விஜயின் தாய் மூன்று மாதத்துக்கு முன் தான் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்தக்கது. சுமலதா மீது விவசாயிகள் கோபம்மாண்டியா: மாண்டியா மாவட்டத்தில் பலத்த மழையால், 150க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. பல நுாறு ஏக்கர் விவசாய நிலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. பொதுமக்கள்,விவசாயிகள் கஷ்டத்தில் உள்ளனனர். இவ்வளவு நடந்தும் வெள்ள பாதிப்புகளை பார்வையிட மாண்டியா தொகுதி சுயேச்சை எம்.பி., சுமலதா வரவில்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.சதுக்கம் துவக்கம்உடுப்பி: உடுப்பி சிர்வாவில் மூத்த சமூக ஆர்வலரான மறைந்த கங்கேஜார் குட்டி ஷெட்டி சதுக்கம் தொடக்க விழா நேற்று நடந்தது. இங்கு கங்கோஜார் குட்டி ஷெட்டி நினைவு துாண் திறக்கப்பட்டது. இதில் பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X