சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில்வே தரைப்பாலத்தின் கீழ் மழை நீரில் சிக்கிய அரசு பஸ்

Added : நவ 19, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனம் ரயில்வே தரைப்பாலத்தின் கீழ் மழைநீரில் அரசு பஸ் சிக்கியது.புதுச்சேரியிலிருந்து திருப்பதி வரை செல்லும் அரசு பஸ் நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் திண்டிவனம் பஸ் நிலையம் செல்வதற்காக, ரயில்வே தரைப்பாலத்தின் வழியாக வந்தது.ரயில்வே தரைப்பாலத்தின் கீழ் கிடங்கல் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நீரில் பஸ் வந்தது போது,

திண்டிவனம்-திண்டிவனம் ரயில்வே தரைப்பாலத்தின் கீழ் மழைநீரில் அரசு பஸ் சிக்கியது.புதுச்சேரியிலிருந்து திருப்பதி வரை செல்லும் அரசு பஸ் நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் திண்டிவனம் பஸ் நிலையம் செல்வதற்காக, ரயில்வே தரைப்பாலத்தின் வழியாக வந்தது.ரயில்வே தரைப்பாலத்தின் கீழ் கிடங்கல் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நீரில் பஸ் வந்தது போது, நீரோட்டம் அதிகரிப்பு காரணமாக 10 பயணிகளுடன் பாலத்தின் அடியில் பஸ் சிக்கிக் கொண்டது.உடன் அப்பகுதி மக்கள், பஸ்சிலிருந்த பயணிகளை பத்திரமாக இறக்கி வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து, பாலத்தின் அடியில் சிக்கிய அரசு பஸ்சை, நீண்ட போராட்டத்திற்கு பிறகு பொக்லைன் மூலம் வெளியே கொண்டு வந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X