செஞ்சி அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் புகுந்த வௌ்ளம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சி அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் புகுந்த வௌ்ளம்

Added : நவ 19, 2021
Share
செஞ்சி-செஞ்சி பகுதியில் ஏரிகள் நிரம்பி வெளியேறிய உபரிநீரால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் மூழ்கின.செஞ்சி நகரில் 'பி'ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் திருவண்ணாமலை சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பஸ் நிலையத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மேலும், கடை வீதி, காந்தி பஜார், கூட்ரோட்டில் உள்ள கடைகளில் நீர் புகுந்தது.இதேபோன்று, பெரியாமூர்,

செஞ்சி-செஞ்சி பகுதியில் ஏரிகள் நிரம்பி வெளியேறிய உபரிநீரால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் மூழ்கின.செஞ்சி நகரில் 'பி'ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் திருவண்ணாமலை சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பஸ் நிலையத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மேலும், கடை வீதி, காந்தி பஜார், கூட்ரோட்டில் உள்ள கடைகளில் நீர் புகுந்தது.இதேபோன்று, பெரியாமூர், செம்மேடு, அணை பேரி, கீழ்மலை, அனந்தபுரம் பகுதிகளிலும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. அத்தியூர் கிராமத்தில் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் கோழிப்பண்ணையில் புகுந்து 5000 கோழிகள் இறந்தன.அன்னமங்கலம், மரூர், சத்தியமங்கலம், சோ.குப்பம், ஜெயங்கொண்டான் உட்பட பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.தாழ்வான பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வராகநதி, சங்கராபரணி, தொண்டியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் செவலபுரை, வீரணாமூர், மேல்களவாய், தென்பாலை உட்பட 10க்கும் மேற்பட்ட பிரதான கிராம சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவு மற்றும் பிரசவ வார்டில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து வார்டில் இருந்த கர்ப்பிணிகள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X