தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
தேனி: பொது சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. இப் பணியில் 1640 பேர் கொண்ட 410 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மத்திய சுகாதாரத்துறை, மாநில அரசுகள் நவ., 20க்குள் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தி விட உத்தரவிட்டிருந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பினர்,

தேனி: பொது சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. இப் பணியில் 1640 பேர் கொண்ட 410 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை, மாநில அரசுகள் நவ., 20க்குள் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தி விட உத்தரவிட்டிருந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பினர், பொது சுகாதாரத்துறையினர் இணைந்து தடுப்பூசி செலுத்தாதவர்கள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. அதன்பின், வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கப்பட்டுள்ளன.ஒரு குழுவிற்கு தலா ஒரு டாக்டர், நர்ஸ், கிராம சுகாதார செவிலியர், மருந்தாளுநர் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தப் பணிகளில் ஊரக பகுதியில் 189 குழுக்கள், பேரூராட்சி பகுதியில் 89 குழுக்கள், நகராட்சிகளில் 84 குழுக்களில் இதுதவிர 41 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 7 அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 410 குழுக்களில் 1640 பணியாளர்களை இணைந்து தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தயக்கம் இன்றி வரணும்:மாவட்டத்தில் முதல் டோஸ் தடுப்பூசி 6,58,600 பேரும், 2ம் டோஸ் 3,74,460 பேர் செலுத்தி உள்ளனர். இதில் 11,304 மாற்றுத்திறனாளிகள், 11,432 கருவுற்ற தாய்மார்கள், 10, 846 பாலுாட்டும் தாய்மார்கள் உள்ளனர். மாமிச உணவு சாப்பிட்டால், மது குடித்தால் தடுப்பூசி போடக்கூடாது என்பது தவறான கருத்தை புறம் தள்ளி, தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வர வேண்டும்.'' என, துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X