பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனத்தில் மழைநீர் தேக்கம் அகற்றும் பணியில் ஊழியர்கள்

Added : நவ 19, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனத்தில் மழைநீரை தேங்கிய இடங்களில் பொக்லைன் மூலம் வெளியேற்றும் பணி நடந்தது.திண்டிவனம் கிடங்கல் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறிய மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் 10 ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.நேற்று

திண்டிவனம்-திண்டிவனத்தில் மழைநீரை தேங்கிய இடங்களில் பொக்லைன் மூலம் வெளியேற்றும் பணி நடந்தது.திண்டிவனம் கிடங்கல் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறிய மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் 10 ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.நேற்று காலை முதல், பல்வேறு இடங்களில் கால்வாய் அடைப்புகளை எடுத்து மழைநீர் வடிய வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர்.புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற பைபாஸ் சாலையில் உள்ள சென்டர் மீடியன் மற்றும் அப்பகுதியில் உள்ள வாய்க்கால் தடுப்புச் சுவர் ஆகியவற்றை உடைத்து நீரை வெளியேற்றினர். இந்த பணி நேற்று இரவு வரை நீடித்தது. இப்பணியை நகராட்சி கமிஷனர் சவுந்தரராஜன் மற்றும் செயற்பொறியாளர் தேவநாதன் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X