சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் தேங்கி நிற்கும் நீரால் மக்கள் அவதி

Added : நவ 19, 2021
Advertisement
உளுந்துார்பேட்டை-எலவனாசூர்கோட்டை சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் மழை நீரால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.உளுந்துார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.. எலவனாசூர்கோட்டை நம்பி குளம், கீழப்பாளையம் குளங்களில் நிரம்பும் நீர், எல்.என். பாளையம் ஏரிக்கு எலவனாசூர்கோட்டை சார் பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள

உளுந்துார்பேட்டை-எலவனாசூர்கோட்டை சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் மழை நீரால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.உளுந்துார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.. எலவனாசூர்கோட்டை நம்பி குளம், கீழப்பாளையம் குளங்களில் நிரம்பும் நீர், எல்.என். பாளையம் ஏரிக்கு எலவனாசூர்கோட்டை சார் பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள நெடுஞ்சாலையின் குறுக்கே சிறு பாலத்தின் வழியாகச் செல்லும்.சிறுபாலம் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் செல்ல வழியின்றி, தற்போது பெய்து வரும் தொடர் மழையால் சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.தேங்கியநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X