தமிழ்நாடு

வாரியங்களில் பதிந்தால் நலத்திட்ட உதவிகள் ஏராளம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
தொழிலாளர் நல உதவி கமிஷனர் ஆனந்தி தகவல்தொழிலாளர் நலத்திட்டங்கள் குறித்தும், தொழிலாளர் வாரியங்களில் இணைவதன் அவசியம் குறித்து தேனி மாவட்ட தொழிலாளர் நல உதவி கமிஷனர் ஆனந்தி கூறியதாவது: உங்கள் துறையின் நோக்கம் தொழிலாளர் நலனுக்காக செயல்படுகிறோம். தொழிலாளர் நலவாரிய சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள்

தொழிலாளர் நல உதவி கமிஷனர் ஆனந்தி தகவல்

தொழிலாளர் நலத்திட்டங்கள் குறித்தும், தொழிலாளர் வாரியங்களில் இணைவதன் அவசியம் குறித்து தேனி மாவட்ட தொழிலாளர் நல உதவி கமிஷனர் ஆனந்தி கூறியதாவது:


உங்கள் துறையின் நோக்கம்தொழிலாளர் நலனுக்காக செயல்படுகிறோம். தொழிலாளர் நலவாரிய சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குகிறோம்.எத்தனை நலவாரியங்கள்உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு, சலவை தொழிலாளி, முடித்திருத்துவோர், வீட்டு பணி, தையல் வேலை, கைவினை, பனை தொழிலாளர்கள், கட்டுமானம், ஓட்டுனர் நலவாரியங்கள் உட்பட 17 வாரியங்கள் உள்ளன. உறுப்பினராக தகுதிசுமை தொழிலாளிகள், ஆட்டோ, டாக்சி, வேன், டெம்போ, லாரி டிரைவர்கள், சிலிண்டர் வினியோகிப்பாளர்கள், சாக்குத்தொழில், சலவை தொழில் என 60 வகை அமைப்புசாரா தொழில்கள் உள்ளன. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்


வாரியத்தில் பதிவு செய்வது எப்படிபோட்டோ,ஆதார், அலைபேசி எண், தொழிற்சங்கம் அல்லது வி.ஏ.ஓ.விடம் பெற்ற தொழில் சான்றுடன் www.labour.tn.gov.in இணையதளம், இ-சேவை மையங்கள் மூலம் உறுப்பினராக இலவசமாக பதிவு செய்து அடையாள அட்டை பெறலாம். உரிய ஆவணங்களோடு அலுவலகம் வந்தாலும் பதிவு செய்து கொடுப்போம். இதை 5 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர்களின் எண்ணிக்கைமாவட்டத்தில் 16 நலவாரியங்களில் 82,438 பேர் பதிவு செய்துள்ளனர்.


நலத்திட்டங்கள் என்னென்னவாரியத்தில் பதிவு செய்தால் திருமணமாகாத தொழிலாளர் அல்லது தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு (குடும்பத்துக்கு இருமுறை) திருமண உதவித்தொகை. 60 வயதுக்கு பிறகு ஓய்வூதியம் வழங்கப்படும்.


எத்தனை பேருக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது4484 பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
* பெண் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை உண்டாபதிவுபெற்ற பெண் தொழிலாளர்களுக்கு இரு பிரசவத்துக்கு உதவித்தொகையாக ரூ.6000, கருக்கலைப்பு,கருச்சிதைவு ஏற்பட்டால்(இருமுறை) ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.


பணியின்போது அசம்பாவிதம் நிகழ்ந்தால் உதவிகள் உண்டா...கட்டுமான தொழிலாளர் வாரியத்தில் பதிவு செய்தோர் பணியின்போது இறந்தால் ரூ.5 லட்சமும், பிற நலவாரியத்தில் உறுப்பினருக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும். இயற்கை மரணங்கள் ஏற்பட்டாலும் ரூ.17 ஆயிரம் வழங்கப்படும். கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறதாதொழிலாளர்களின் பெண் குழந்தைகளின் 10, பிளஸ்1, பிளஸ் 2 படிப்புக்கு ஆண்டுக்கு தலா ரூ.1000, 10ம்வகுப்பு,பிளஸ் 2 தேர்ச்சியடைந்தால்(மகன், மகள்) ரூ.1000, ரூ.1500 வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, விடுதியில் தங்கி படித்தல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், இன்ஜி, மருத்துவம் உள்பட அனைத்து படிப்புகளுக்கும் உதவித்தொகை வழங்குகிறோம்.


அமலாக்க பிரிவின் பணி என்னஅமலாக்க பிரிவு சார்பில் பல்வேறு நிறுவனங்கள், பெரிய கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தொழிலாளர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ., முறையாக பிடிக்கப்படுகிறதா, உரிய முறையில் ஊதியம், விடுப்பு வழங்கப்படுகிறதா என கண்காணிக்கிறோம். விதிமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


உங்களை தொடர்பு கொள்ள என்ன செய்யலாம்தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள தொழிலாளர் அலுவலர் அலுவலகத்துக்கு நேரில் வரலாம். 04546-26035 எண்ணை தொடர்பு கொண்டு குறைகளை கூறினால் நிவர்த்தி செய்வோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X