தமிழ்நாடு

பாதிப்பு- கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை...திருக்கோவிலூரில் கொட்டித் தீர்த்தது மழை

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார்-திருக்கோவிலுார் பகுதியில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை பகலிலும் தொடர்ந்ததால் நகர் முழுதும் வெள்ளக்காடாக மாறியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தது.திருக்கோவிலுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காலமான செப்டம்பர் மாதம் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியது. சாத்தனுார் அணை நிரம்பி தென்பெண்ணை
 பாதிப்பு- கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை...திருக்கோவிலூரில் கொட்டித் தீர்த்தது மழை

திருக்கோவிலுார்-திருக்கோவிலுார் பகுதியில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை பகலிலும் தொடர்ந்ததால் நகர் முழுதும் வெள்ளக்காடாக மாறியது.

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தது.திருக்கோவிலுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காலமான செப்டம்பர் மாதம் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியது. சாத்தனுார் அணை நிரம்பி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து துவங்கியது.கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தென்பெண்ணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் 150க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியது.இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவக்கத்திலிருந்தே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ஆற்றுப்பாசனம் இல்லாத ஏரி, குளங்களும் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.ஓடை, சிற்றாறு, தென்பெண்ணையாறு உள்ளிட்ட அனைத்து நீர் வழித்தடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுக்கத் துவங்கியது. நேற்று மாலை நிலவரப்படி திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் 17 ஆயிரத்து 500 கன அடி நீர் சென்று கொண்டிருந்தது.இரண்டு நாட்களுக்கு கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை லேசாக பெய்யத் துவங்கிய மழை நேற்று காலை 8:00 மணியளவில் தீவிரமடைந்தது. 10:00 மணிக்கு மிக கனமழையாக மாறியது.

காலை 6:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை 8.5 செ.மீ., மழை பதிவாகியது. இதன் காரணமாக திருக்கோவிலுார் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது.சந்தப்பேட்டை, சைலோம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் சென்றதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.சந்தப்பேட்டை, ஆசனுார் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்றன.இதற்கிடையே பெண்ணையாற்றின் நடுவே 5க்கும் மேற்பட்ட மாடுகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன.தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து உயர்மட்ட பாலத்தின் மேல் இருந்து சிக்கிய மாடுகளை உயிருடன் மீட்டனர்.

அரகண்டநல்லுார் லட்சுமி வித்யாலயா பள்ளி அருகே ஓடை நீர் சாலையை கடந்ததால் திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை தடை செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விதைக்கப்பட்ட உளுந்து பயிர் தொடர் மழையின் காரணமாக சேதமடைந்தன. சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X