பொது செய்தி

தமிழ்நாடு

சண்முகாநதி அணை திறப்பு 120 நாட்களுக்கு நீர் வழங்க முடிவு

Added : நவ 19, 2021
Share
Advertisement
உத்தமபாளையம்: சண்முகாநதி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், நேற்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.ராயப்பன்பட்டி மலையடிவாரத்தில் உள்ளது சண்முகாநதி அணை. இந்த அணையில் நேரடி பாசன வசதி பெறாவிட்டாலும் நிலத்தடி நீர்மட்டம் உயர பயன்படும். ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, சின்னஓவுலாபுரம், எரசை, கன்னிசேர்வைபட்டி, அழகாபுரி, வெள்ளையம்மாள்புரம்,
சண்முகாநதி அணை திறப்பு  120 நாட்களுக்கு நீர் வழங்க முடிவு

உத்தமபாளையம்: சண்முகாநதி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், நேற்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.ராயப்பன்பட்டி மலையடிவாரத்தில் உள்ளது சண்முகாநதி அணை. இந்த அணையில் நேரடி பாசன வசதி பெறாவிட்டாலும் நிலத்தடி நீர்மட்டம் உயர பயன்படும்.

ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, சின்னஓவுலாபுரம், எரசை, கன்னிசேர்வைபட்டி, அழகாபுரி, வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி பகுதியில் உள்ள 1640 ஏக்கர் புன்செய் நிலங்களுக்கு அணை நீர் பயன்படும். வடகிழக்கு பருவமழையில் நவம்பர், டிசம்பரில் அணை நிரம்பும்.இந்தாண்டு நவம்பர் 3 ல் அணை முழு கொள்ளளவை எட்டியது.

இருவாரங்களை கடந்த நிலையில் நேற்று அணை நீர்மட்டம் 52.50 அடியாக இருந்த நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா, உதவி செயற்பொறியாளர் செல்வம், எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், உதவிபொறியாளர் பிரேம்குமார் பங்கேற்றனர். விநாடிக்கு 14.47 கனஅடி தண்ணீர் விடுவிக்கப்படுகிறது. அணை நீர்மட்டத்தை பொறுத்து 60 முதல் 120 நாட்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X