பொது செய்தி

தமிழ்நாடு

இளைஞர் நீதி குழுவுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாவட்ட, இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் பதவியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இது குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்திற்கு, ஒரு பெண் உட்பட இரண்டு சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து,

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாவட்ட, இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் பதவியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இது குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்திற்கு, ஒரு பெண் உட்பட இரண்டு சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.குழந்தைகள் தொடர்பான உடல் நலம் கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது ஏழு ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள், 35 - 65 வயதுக்குள் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்: 314 கே.டி.எஸ்.மணி தெரு, மாமல்லன் நகர், காஞ்சிபுரம் மாவட்டம் - 631502 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.விபரங்களுக்கு, 044 - 2723/4950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X