பொது செய்தி

தமிழ்நாடு

உலக பாரம்பரிய வாரம் துவக்கம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
மாமல்லபுரம்-உலக பாரம்பரிய வார துவக்க நாளான இன்று, மாமல்லபுரம் தொல்லியல் சின்னங்களை இலவசமாக காணலாம் என, தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.உலகின் பழமை வாய்ந்த நாடுகளில், பாரம்பரிய தொல்லியல் சின்னங்கள் அமைந்துள்ளன.இச்சின்னங்கள், ஒரு நாட்டின் பழங்கால கலை, கலாசார முறைகளை உணர்த்துகின்றன. அடுத்தடுத்த தலைமுறையினர், இவற்றை பற்றி அறியவும், முக்கியத்துவத்தை உணர்ந்து

மாமல்லபுரம்-உலக பாரம்பரிய வார துவக்க நாளான இன்று, மாமல்லபுரம் தொல்லியல் சின்னங்களை இலவசமாக காணலாம் என, தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.உலகின் பழமை வாய்ந்த நாடுகளில், பாரம்பரிய தொல்லியல் சின்னங்கள் அமைந்துள்ளன.இச்சின்னங்கள், ஒரு நாட்டின் பழங்கால கலை, கலாசார முறைகளை உணர்த்துகின்றன. அடுத்தடுத்த தலைமுறையினர், இவற்றை பற்றி அறியவும், முக்கியத்துவத்தை உணர்ந்து பாதுகாக்கவும், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இதற்காக ஆண்டுதோறும் ஏப்., 18ல், உலக பாரம்பரிய நாள்; நவ., 19 - 25ல், உலக பாரம்பரிய வாரம் என, தொல்லியல் துறை கடைபிடிக்கிறது. நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாளான நவ., 19ல், உலக பாரம்பரிய வாரம் துவங்கி, 25 வரை கடைப்பிடிக்கப்படுகிறது.இவ்வாரம், இன்று துவங்குவதால், மாமல்லபுரம் தொல்லியல் சின்னங்களை, சுற்றுலாப் பயணியர் இன்று மட்டும் இலவசமாக காணலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.மாமல்லபுரத்தில், வழக்கமாக நடத்தப்படும் வார விழாவை தவிர்த்து, காஞ்சிபுரம் வைகுந்தபெருமாள் கோவிலில், இன்று விழா நடத்தப்படுகிறது.தொல்லியல் ஆய்வுத்துறை, தமிழக தொல்லியல் துறை இணைந்து நடத்தும் விழாவில், தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நாட்டில் உள்ள உலக மரபு சின்னங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X