பாரபட்சமாக ஆக்கிரமிப்பு அகற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாரபட்சமாக ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : நவ 19, 2021
Share
சின்னமனுார்: சின்னமனுாரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பாரபட்சம் காட்டுவதாக வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.சின்னமனுார் பஸ் ஸ்டாண்டிலிருந்து முத்துலாபுரம் விலக்கு வரை ரோட்டின் இரண்டு பக்கமும் நுாற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இந்த கடைக்காரர்கள் தங்களின் விளம்பர பலகைகள், படிக்கட்டுகளை ரோட்டில் ஆக்கிரமித்து கட்டியுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகம்

சின்னமனுார்: சின்னமனுாரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பாரபட்சம் காட்டுவதாக வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.சின்னமனுார் பஸ் ஸ்டாண்டிலிருந்து முத்துலாபுரம் விலக்கு வரை ரோட்டின் இரண்டு பக்கமும் நுாற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இந்த கடைக்காரர்கள் தங்களின் விளம்பர பலகைகள், படிக்கட்டுகளை ரோட்டில் ஆக்கிரமித்து கட்டியுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. ஆண்டிற்கு ஒரிரு முறை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கிறது.

நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை, நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டது. மெயின்ரோட்டில் காந்திசிலை வரை மட்டுமே ஆக்கிரமிப்பு அகற்றினர். அதற்கு அடுத்துள்ள ஆக்கிரமிப்பு கண்டுகொள்ள வில்லை. பல இடங்களில் பாரபட்சம் காட்டியதாக வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம்இன்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X