பொது செய்தி

தமிழ்நாடு

இளைய தலைமுறையினர் அறியாத கார்த்திகை தீப திருநாள் கொண்டாட்டம்

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாலாஜாபாத்: தீபாவளி பண்டிகையை போல கார்த்திகை தீப திருநாளும் விசேஷமானது எனவும், முன் போல இப்போது அது கொண்டாடப்படுவதில்லை எனவும், வரலாற்று ஆய்வாளர் கூறினார்.உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:கார்த்திகை தீபதிருநாளில், வீடு வாசல், சுற்றுச்சுவர், மாடிப்படி என, அனைத்து இடங்களிலும் அகல் விளக்குகளால் தீபம் ஏற்றுவர். சிவன், பெருமாள் ஆகிய
 இளைய தலைமுறையினர் அறியாத கார்த்திகை தீப திருநாள் கொண்டாட்டம்

வாலாஜாபாத்: தீபாவளி பண்டிகையை போல கார்த்திகை தீப திருநாளும் விசேஷமானது எனவும், முன் போல இப்போது அது கொண்டாடப்படுவதில்லை எனவும், வரலாற்று ஆய்வாளர் கூறினார்.

உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:கார்த்திகை தீபதிருநாளில், வீடு வாசல், சுற்றுச்சுவர், மாடிப்படி என, அனைத்து இடங்களிலும் அகல் விளக்குகளால் தீபம் ஏற்றுவர். சிவன், பெருமாள் ஆகிய கோவில்களில், பனை ஓலையில் சொக்கப்பனை கொளுத்தி வழிபடுவர். இது, ஆதியும் அந்தமாக இருக்கும் பரம்பொருளை வழிபாடு செய்வதற்கு சமம் என, கூறுவது உண்டு.இரவில், சிறுவர் மற்றும் இளவட்டங்கள், மாவெளி சுற்றி கொண்டாடும் வழக்கம் இருந்தது. இந்த மாவெளி சுற்றும்போது, புகையில்லாத தீபாவளி கொண்டாடிய மன நிறைவு இருக்கும்.

மாவெளியை வட்டம், சிலம்பம் உள்ளிட்ட வடிவங்களில் சுற்றி மகிழ்வர். அப்போது, 'மாவெளியோ... மாவெளி... மாவெளிக்காரன் பொண்டாட்டி மரக்காய் பிள்ளை பெற்றாளாம். இடுப்பொடிந்து செத்தாளாம்' என கேலி பாடல் பாடுவர். இரு தினம் இக்கொண்டாட்டம் இருக்கும். தீபாவளியை போல கார்த்திகை தீபத்தை, அதிகாலையில் குளித்து கொண்டாடுவர். மாசு ஏற்படுத்தும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் இளைய தலைமுறையினர், மாசில்லாத மாவெளி சுற்றி கொண்டாட முன் வருவதில்லை.இவ்வாறு அவர்கூறினார்.


மாவெளி இப்படி தான் செய்யணும்!


ஆண் பனை மரங்களில் விளையும் வண்ணாம் பூ என அழைக்கப்படும், நீளப் பூக்களை சேகரிக்க வேண்டும். உலர வைக்கப்பட்ட வண்ணாம் பூக்களை, குழி தோண்டி அதில் போட்டு எரிக்க வேண்டும். பின், மண் அல்லது பரங்கிக்காய் இலை போட்டு, குழியை மூட வேண்டும். சில மணி நேரம் கழித்து, கருகிய வண்ணாம் பூக்களை எடுத்து, அம்மியில் மாவு போன்று அரைக்க வேண்டும்.நுால் துணி நீள வாக்கில், வண்ணாம் பூ மாவு, உப்பு, உமி உள்ளிட்ட பொருட்களை சேர்த்து உருண்டையாக சுற்றி கட்ட வேண்டும். பனை மட்டை எடுத்து, நீள வாக்கில் நான்காக வெட்டி வைத்தால் மாவெளி தயார். கயிறு கட்டிய பின், மாவெளி உருண்டை முனையில் தீப்பற்ற வைத்ததும், சிறுவர்கள் அதை சுற்றி விளையாடுவர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesan - Tirupur,இந்தியா
20-நவ-202113:59:34 IST Report Abuse
Venkatesan சிறு வயதில் இதை நான் செய்து விளையாடி இருக்கிறேன் - வெங்கடேசன்
Rate this:
Cancel
Venkatesan - Tirupur,இந்தியா
20-நவ-202113:58:31 IST Report Abuse
Venkatesan சிறு பழத்தில் இதை நான் செய்து விளையாடி இருக்கிறேன் - வெங்கடேசன்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
20-நவ-202105:00:04 IST Report Abuse
NicoleThomson இதனை நான் சிறுவயதில் பார்த்துள்ளேன் கொள்ளிடம் என்ற ஆனைக்காரன் சத்திரம் ஊரில் எட்டாம் வகுப்பு வரை பள்ளி இருந்தது அங்கே ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொது அருகில் இருந்த பெருமாள் கோவிலில் சாயந்திரம் இந்த நிகழ்ச்சி நடத்துவார்கள் எங்க பாட்டி சூசையம்மாவின் வீட்டிற்கு அருகில் நடப்பதால் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது இன்று அங்கே உதவி பெரும் பள்ளி இருந்த இடத்தில் ஒரு அரசியல்வாதி வீடு கட்டியுள்ளான் அந்த கோவிலின் குளத்தில் ஆக்ரமிப்பு நடந்த இடமே தெரியலை . ஆனால் குளம் இல்லை . இவ்வளவும் நடந்து எங்க பாட்டியின் வீட்டை தேடினால் சிறு ஓலைக்குடிசை இன்னமும் உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X