சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மஞ்சாகுப்பம் பள்ளி கூரை சேதம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருவாலங்காடு--திருவாலங்காடு அடுத்த, மஞ்சாகுப்பம் அரசு நடுநிலைப் பள்ளியின் சேதமடைந்த கூரையை சீரமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.மஞ்சாகுப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில், 110 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், 6 -- 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருக்கும் அறையின் வாயிலில் கூரை சேதமடைந்து உள்ளது.மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சேதம் உள்ள நிலையில், கன மழை

திருவாலங்காடு--திருவாலங்காடு அடுத்த, மஞ்சாகுப்பம் அரசு நடுநிலைப் பள்ளியின் சேதமடைந்த கூரையை சீரமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.மஞ்சாகுப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில், 110 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், 6 -- 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருக்கும் அறையின் வாயிலில் கூரை சேதமடைந்து உள்ளது.மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சேதம் உள்ள நிலையில், கன மழை பெய்து வருவதால், சேதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.இரண்டு ஆண்டுகளாக சேதமடைந்த கூரையை சரி செய்து தர பெற்றோர் கோரிக்கை வைத்து வரும் நிலையில், இந்த ஆண்டாவது சரி செய்யப்பட வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து வட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில் ''கட்டடம் சீரமைக்க முன்மொழிவு வந்துள்ளது. சரி செய்யப்பட உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X