தேர்தல் பணியாற்றிய அலுவலர்களுக்கு மதிப்பூதியம் ரூ.1.94 கோடி ஒதுக்கீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் பணியாற்றிய அலுவலர்களுக்கு மதிப்பூதியம் ரூ.1.94 கோடி ஒதுக்கீடு

Added : நவ 19, 2021
Share
தேனி: தேனி மாவட்டத்தில் சட்டபை தேர்தலில் பணியாற்றிய 1268 அலுவலர்களுக்கு மதிப்பூதியமாக ரூ.1.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரலில் நடந்தது. இதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மதிப்பூதியம் வழங்காமல் இருந்தது. இத் தொகை வழங்க கோரிவந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பணியாற்றிய மாவட்ட தேர்தல் அலுவலர், டி.ஆர்.ஓ.,

தேனி: தேனி மாவட்டத்தில் சட்டபை தேர்தலில் பணியாற்றிய 1268 அலுவலர்களுக்கு மதிப்பூதியமாக ரூ.1.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரலில் நடந்தது. இதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மதிப்பூதியம் வழங்காமல் இருந்தது. இத் தொகை வழங்க கோரிவந்தனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பணியாற்றிய மாவட்ட தேர்தல் அலுவலர், டி.ஆர்.ஓ., கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்), தேர்தல் நடத்தும் அலுவலர் 4, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 8, தாசில்தார்(தேர்தல்), 7 துணை தாசில்தார்கள் (தேர்தல்), மண்டலஅலுவலர்கள் 171 உள்பட மொத்தம் 1268 அலுவலர்களுக்கு மதிப்பூதியம் ரூ.1 கோடியே 94 லட்சத்து 60 ஆயிரத்து 924 ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ரூ.33 ஆயிரமும் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரமும் அலுவலர்களுக்கு கிடைக்கும். சில நாட்களில் ஊதியம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X