பொது செய்தி

தமிழ்நாடு

இடுக்கி அணை மூன்றாம் முறையாக திறப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
மூணாறு: இடுக்கி அணை 30 நாட்களுக்குள் மூன்றாம் முறையாக நேற்று திறக்கப்பட்டது.கேரளாஇடுக்கி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடுக்கி அணை 554 அடி உயரம் கொண்டது. அந்த அணை 'ஆர்ச்' வடிவிலும், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ளது. இரண்டு அணைக்கட்டுகள் என்றபோதும் தண்ணீர் ஒன்றாக தேங்கும்.அணை நிரம்பும்போது கடல் போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும். 2018
இடுக்கி அணை மூன்றாம் முறையாக திறப்பு

மூணாறு: இடுக்கி அணை 30 நாட்களுக்குள் மூன்றாம் முறையாக நேற்று திறக்கப்பட்டது.கேரளாஇடுக்கி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடுக்கி அணை 554 அடி உயரம் கொண்டது. அந்த அணை 'ஆர்ச்' வடிவிலும், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ளது. இரண்டு அணைக்கட்டுகள் என்றபோதும் தண்ணீர் ஒன்றாக தேங்கும்.அணை நிரம்பும்போது கடல் போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும்.

2018 ஆகஸ்ட்டில் பெய்த கன மழையின்போது அணை திறக்கப்பட்டது. அதில் ஏற்பட்ட குளறுபடியால் கடும் சேதங்கள் ஏற்பட்டன. அதனை தவிர்த்துகுறிப்பிட்ட அளவில் நீர்மட்டத்தை பராமரிக்கும் வகையில் அக்.19ல் மூன்று மதகுகள் திறக்கப்பட்டன. அவை படிப்படியாக மூடப்பட்ட நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையில் நீர்மட்டம் உயர்ந்தது.

நவ.14ல் மீண்டும் ஒரு மதகு திறக்கப்பட்டு நவ.16 இரவில் மூடப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையில் நேற்று காலை 10:00 மணி நிலவரப்படி நீர்மட்டம் 399.46அடியாக இருந்தபோது ஒரு மதகு 40 செ.மீ., உயர்த்தப்பட்டு வினாடிக்கு 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பெரியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக அணை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X