பொது செய்தி

இந்தியா

சபரிமலை தீர்த்தத்தை அவமதித்த அமைச்சர்; புதிய சர்ச்சையில் பினராயி அரசு

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (66)
Share
Advertisement
சபரிமலை : சபரிமலை தீர்த்தத்தை அவமதித்த கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன், தனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என கூறியதால் பக்தர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை ஒன்றாம் தேதியான நவ., 16ம் தேதி அதிகாலை நடை திறந்தபோது கேரள தேவசம்போர்டு அமைச்சரும், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான ராதாகிருஷ்ணன் சன்னிதானத்தில் இருந்தார்.
sabarimala, சபரிமலை, தீர்த்தம், அவமதிப்பு, அமைச்சர், பினராயி

சபரிமலை : சபரிமலை தீர்த்தத்தை அவமதித்த கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன், தனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என கூறியதால் பக்தர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை ஒன்றாம் தேதியான நவ., 16ம் தேதி அதிகாலை நடை திறந்தபோது கேரள தேவசம்போர்டு அமைச்சரும், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான ராதாகிருஷ்ணன் சன்னிதானத்தில் இருந்தார். மேல்சாந்தி அபிஷேகம் நடத்திய பின் தீர்த்தம் எடுத்து வந்து அமைச்சர், தேவசம்போர்டு நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

அமைச்சர் தவிர மீதமுள்ள அனைவரும் பயபக்தியுடன் தீர்த்தத்தை குடித்தனர். ஆனால் அமைச்சர் குடிக்காமல் அதை இரண்டு கைகளிலும் தேய்த்தார். இந்த வீடியோ நேற்று வெளியானதும் சர்ச்சை ஏற்பட்டது. பக்தர்கள் கொந்தளித்தனர். ஆனால் அமைச்சரோ, 'எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது, சிறு வயதில் இருந்தே கோவிலுக்கு சென்றதில்லை,'' என்றார். இது, பக்தர்களிடம் மேலும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news



'கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள அமைச்சரே இப்படி பேசலாமா, கடவுள் நம்பிக்கை உள்ள ஒருவரை தேவசம் அமைச்சராக நியமிக்காதது ஏன்' என, பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். பெண்களை சபரிமலைக்கு அனுப்புவதில் அதீத ஆர்வம் காட்டி சர்ச்சையில் சிக்கிய பினராயி தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு தற்போது அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
20-நவ-202100:14:39 IST Report Abuse
M  Ramachandran இது போனற ஆட்க்கள் தே வாலயத்தில் ஒருத்தர் நாக்கை தடவி அதே கைய்குட்டாயால் இன்னோருத்தர் நாக்கிற்கு தடவினாலும் ஏற்று கொள்வார்கள்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
19-நவ-202123:43:59 IST Report Abuse
M  Ramachandran இன்னும் கொஞ்ச நாள் போனால் கேரள வர்ட்டிக்கண்ணுக்கு அடுத்து சுற்றுலா மையமாக மாறக்கூடிய சாத்திய கூறு உள்ளது.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
19-நவ-202123:40:05 IST Report Abuse
M  Ramachandran நீங்கள் தானே அரசை செர்டிபிககேட் கொடுத்து தேர்ந்தேடுத்தீர்கள் பிறகு அப்படி தான் செய்வார்கள்.மூடிக்கொள்ள தான் வேண்டும்.அது மட்டுமல்ல மதமாற்ற கும்பலுக்கும் செர்டிபிகேட் கொடுத்துள்ளீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X