போலீஸ் டைரி

Added : நவ 19, 2021
Share
Advertisement
விபத்தில் பஸ் டிரைவர் உயிரிழப்புநகரி: சித்துார் மாவட்டம், புச்சிநாயுடு கண்டிகை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர ராவ், 36. இவர், காளஹஸ்தி ஆர்.டி.சி. அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து சொந்த கிராமத்திற்கு, இருசக்கர வாகனத்தில், திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தங்கேல்லபாளையம் அருகே எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது

விபத்தில் பஸ் டிரைவர் உயிரிழப்புநகரி: சித்துார் மாவட்டம், புச்சிநாயுடு கண்டிகை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர ராவ், 36. இவர், காளஹஸ்தி ஆர்.டி.சி. அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து சொந்த கிராமத்திற்கு, இருசக்கர வாகனத்தில், திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தங்கேல்லபாளையம் அருகே எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில், வெங்கடேஸ்வர ராவ் சம்பவ இடத்திலேயே இறந்தார். தொட்டம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.குளத்தில் மூழ்கி சிறுவர்கள் பலிநகரி: சித்துார் மாவட்டம், வேதுரகுப்பம் அடுத்த, ஆன்லமடுகு கிராமத்தைச் சேர்ந்த, கஸ்துாரி மகன் ஹகில், 6. இவர், நேற்று முன்தினம், பாட்டி வீட்டிற்கு வந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த தண்ணீர் குட்டையில் சிறுவர்களுடன் ஹகில் விளையாட சென்றான். அப்போது, ஹகில் தண்ணீரில் மூழ்கினர். கிராம மக்கள் சென்று ஹகிலை பிணமாக மீட்டனர்.இதே போல், வி.கோட்டா அடுத்த, எல்.அக்ரஹாரம் என்ற இடத்தில், மஞ்சுளா மகன் அஞ்சிபாபு, 14 மற்றும் ஆனந்தப்பா மகன் கஜேந்திரா, 12, ஆகிய இருவரும் ஏரியில் மீன்பிடிக்கும் போது தண்ணீரில் மூழ்கினர். கஜேந்திராவை இறந்த நிலையில் மீட்டனர். அஞ்சிபாபு என்ற சிறுவனை தேடி வருகின்றனர்.மூவருக்கு 'காப்பு'திருத்தணி: திருத்தணி, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி மகள் கயல், 25. இவர், நேற்று, திருத்தணி பஸ் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது நான்கு பேர் வந்து, கயலை கிண்டல், தகராறு செய்துள்ளனர். திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த செல்வமணி, 40, துரை, 48, குமார், 35, என, தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், தப்பியோடிய ரவியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X