தமிழ்நாடு

மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கனமழையால் பாதிப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
அரண்மனைபுதூர், கள்ளிமந்தையம் ரெட்டியார்சத்திரம்:மூலச்சத்திரம் அருகே அரண்மனைபுதூரில் வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால், உணவு, உடைமைகள் சேதமடைந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி அரண்மனைபுதூரில் இரு நாட்களாக பெய்த தொடர் மழையால் கழிவுநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் தாழ்வான வீடுகளுக்குள்
 மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கனமழையால் பாதிப்பு

அரண்மனைபுதூர், கள்ளிமந்தையம் ரெட்டியார்சத்திரம்:மூலச்சத்திரம் அருகே அரண்மனைபுதூரில் வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால், உணவு, உடைமைகள் சேதமடைந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி அரண்மனைபுதூரில் இரு நாட்களாக பெய்த தொடர் மழையால் கழிவுநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் தாழ்வான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மழைநீரில் வீடுகளில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. மாலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி நிவாரண ஏற்பாடுகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மூதாட்டிகள் மீட்பு

கள்ளிமந்தையம், பெருமாள் கோயில் வலசு பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் ஜேக்கப் மனைவி விஜயா 70, திருமலை செட்டியார் மனைவி அமிர்தம் 75, ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். தாசில்தார் முத்துசாமி தலைமையில் வருவாய்த்துறையினர், உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து மூதாட்டிகளை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நாச்சிமுத்து - -குப்பம்மாள் தம்பதியை மீட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் தங்க வைத்தனர். கள்ளிமந்தையம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் சூழ்ந்த மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X