பொது செய்தி

தமிழ்நாடு

தடய அறிவியல் பணி தேர்வு முடிவு வெளியீடு

Added : நவ 19, 2021
Share
Advertisement
சென்னை : தடய அறிவியல் பணி தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.டி.என்.பி.எஸ்.சி., யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:தடய அறிவியல் பணிகளில் அடங்கிய, இளநிலை அறிவியல் அலுவலர் பதவியில், 72 காலியிடங்களை நிரப்ப, 2019 ஆக., 24ல் தேர்வு நடத்தப்பட்டது. அதில், 8,851 தேர்வர்கள் பங்கேற்றனர்.அவர்களுக்கான முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில்

சென்னை : தடய அறிவியல் பணி தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

டி.என்.பி.எஸ்.சி., யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தடய அறிவியல் பணிகளில் அடங்கிய, இளநிலை அறிவியல் அலுவலர் பதவியில், 72 காலியிடங்களை நிரப்ப, 2019 ஆக., 24ல் தேர்வு நடத்தப்பட்டது. அதில், 8,851 தேர்வர்கள் பங்கேற்றனர்.அவர்களுக்கான முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 138 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், நவ.,25 முதல், டிச.,3க்குள் தங்கள் அசல் சான்றிதழ்களை இ-- சேவை மையங்கள் வழியே பதிவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X