ஆற்றைக் கடக்க வழியில்லாமல் ஆத்துப்பட்டி மக்கள் தவிப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
வேடசந்தூர்: குடகனாற்றில் வெள்ளப்பெருக்கால் ஆத்துப்பட்டி குழாய் பாலம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தாடிக்கொம்பு பேரூராட்சியில் ஆத்துப்பட்டி கிராமம் குடகனாற்றின் கரையோரம் உள்ளது. இங்கு வசிப்பவர்கள் குடகனாற்றைக் கடந்தால்தான் பிற பகுதிகளுக்கு செல்ல முடியும்.இந்தப் பாதையில் குடகனாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி 50 ஆண்டுகளாக
 ஆற்றைக்  கடக்க வழியில்லாமல் ஆத்துப்பட்டி மக்கள் தவிப்பு

வேடசந்தூர்: குடகனாற்றில் வெள்ளப்பெருக்கால் ஆத்துப்பட்டி குழாய் பாலம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தாடிக்கொம்பு பேரூராட்சியில் ஆத்துப்பட்டி கிராமம் குடகனாற்றின் கரையோரம் உள்ளது. இங்கு வசிப்பவர்கள் குடகனாற்றைக் கடந்தால்தான் பிற பகுதிகளுக்கு செல்ல முடியும்.

இந்தப் பாதையில் குடகனாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி 50 ஆண்டுகளாக போராடுகின்றனர். இதுவரை எந்த அரசும் இங்கு பாலம் கட்ட முயற்சிக்கவில்லை. இதனால் போக்குவரத்து வசதியின்றி வேலைவாய்ப்பு, கல்வி பயில்வதற்கு செல்ல வழியின்றி பலர் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

ஆத்துப்பட்டி முன்னாள் கவுன்சிலர் சுப்பையன் கூறியதாவது: நூறாண்டு காலமாக ஆத்துப்பட்டிக்கு செல்ல பாலம் வசதியில்லை. பொதுமக்கள் போக்குவரத்து வசதியின்றி அவதிப்படுகின்றனர். பல குடும்பங்கள் நகருக்கு இடம்பெயர்ந்து விட்டனர். இப்போதும் துண்டிக்கப்பட்ட குழாய் பாலத்தை மண்ணைக் கொட்டி சரிசெய்ய இயந்திரத்துடன் வருகின்றனர். எங்களுக்கு மண் பாதை வேண்டாம். நிரந்தர பாலம்தான் அவசியம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X