பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு நிலம் வழங்கி கலெக்டர் உத்தரவு

Added : நவ 19, 2021
Share
Advertisement
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து கிளை அலுவலகத்திற்கு புதிய அலுவலகம் அமைக்க நிலம் வழங்கி கலெக்டர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் 2011ல் தொடங்கப்பட்டது. ஆத்தூர், கொடைக்கானல், நிலக்கோட்டை உள்ளிட்ட தாலுகாக்களில் உள்ளவர்கள் வாகனங்கள் பதிவு, தகுதிச் சான்று பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், புதிய ஓட்டுனர்

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து கிளை அலுவலகத்திற்கு புதிய அலுவலகம் அமைக்க நிலம் வழங்கி கலெக்டர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.

வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் 2011ல் தொடங்கப்பட்டது. ஆத்தூர், கொடைக்கானல், நிலக்கோட்டை உள்ளிட்ட தாலுகாக்களில் உள்ளவர்கள் வாகனங்கள் பதிவு, தகுதிச் சான்று பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், புதிய ஓட்டுனர் உரிமங்கள் பெற்று வருகின்றனர்.வாடகை கட்டடத்தில் இயங்கிய போக்குவரத்து கிளை அலுவலகத்திற்கு சொந்த அலுவலகம் அமைக்க 5 ஆண்டுகளாக நிலம் தேடி அலைந்தனர். தற்போது கணவாய்பட்டி ஊராட்சி ஓணான் கரடு பைபாஸ் அருகே இரண்டு ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்து மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். கலெக்டர் நிலத்தில் கிளை போக்குவரத்து அலுவலகம் அமைக்க ஆணை பிறப்பித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X