பொது செய்தி

தமிழ்நாடு

கனமழையால் நீரில் மூழ்கிய பயிர்கள்

Added : நவ 19, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி பகுதியில் பெய்த கனமழையால் பூசணி மற்றும் சோளப் பயிர்கள் நீரில் மூழ்கின.ஒட்டன்சத்திரம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. சத்திரப்பட்டி பகுதியில் 86.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. இதனால் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. சின்னக்குளம், காளாஞ்சிபட்டி ஊற்றுக் குளம் மற்றும் சிறு சிறு குளங்கள் நிரம்பி

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி பகுதியில் பெய்த கனமழையால் பூசணி மற்றும் சோளப் பயிர்கள் நீரில் மூழ்கின.

ஒட்டன்சத்திரம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. சத்திரப்பட்டி பகுதியில் 86.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. இதனால் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. சின்னக்குளம், காளாஞ்சிபட்டி ஊற்றுக் குளம் மற்றும் சிறு சிறு குளங்கள் நிரம்பி மறுகால் சென்றன. பெரிய குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

காவேரியம்மாபட்டி பகுதி நிலத்தில் வெள்ளம் சூழ்ந்தது. பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பூசணிக்காய்கள் நீரில் மூழ்கின. செல்லப்ப கவுண்டன் புதூர் பகுதியில் சோளப் பயிர்கள் நீரில் மூழ்கியது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.மூதாட்டிகள் மீட்பு

கள்ளிமந்தையம், பெருமாள் கோயில் வலசு பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் ஜேக்கப் மனைவி விஜயா 70, திருமலை செட்டியார் மனைவி அமிர்தம் 75, ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். தாசில்தார் முத்துசாமி தலைமையில் வருவாய்த்துறையினர், உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து மூதாட்டிகளை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நாச்சிமுத்து - -குப்பம்மாள் தம்பதியை மீட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் தங்க வைத்தனர். கள்ளிமந்தையம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் சூழ்ந்த மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது. அரண்மனைபுதூர் பகுதிகள் பாதிப்பு மூலச்சத்திரம் அருகே அரண்மனைபுதூரில் வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால், உணவு, உடைமைகள் சேதமடைந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி அரண்மனைபுதூரில் இரு நாட்களாக பெய்த தொடர் மழையால் கழிவுநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் தாழ்வான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மழைநீரில் வீடுகளில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. மாலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி நிவாரண ஏற்பாடுகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.வெள்ளத்தில் பெண் பலி வத்தலக்குண்டு மஞ்சளாறு படித்துறை அருகே ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பலியானார்.திண்டுக்கல்லைச் சேர்ந்த பாண்டுரங்கன் மனைவி நாகலட்சுமி 55. மஞ்சளாறு படித்துறை குடியிருப்பில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு ஆற்றின் கரையில் நின்று இருந்தார்.தொடர் மழை காரணமாக ஆற்றில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. எதிர்பாராத விதமாக ஆற்றுக்குள் விழுந்த நாகலட்சுமி வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். வத்தலக்குண்டு தீயணைப்புத்துறையினர் பெரியகுளம் ஆற்றுப் பாலத்தின் அடியில் சிக்கியிருந்த நாகலட்சுமியின் உடலை மீட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X